நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்த சிறுமியின் கிட்னி செயல் இழந்த பரிதாபம்! அதிர வைக்கும் காரணம்! கதறும் பெற்றோர்!

லண்டன்: சிறுநீரகக் கோளாறு வந்ததற்கு நீச்சல் குளத்தில் இருந்து கிருமி தொற்றியதே காரணம் என்று சிறுமி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.


நார்த் டகோட்டா பகுதியை சேர்ந்தவர் சாடி கேமரூன். 8 வயது சிறுமியான இவர், சமீபத்தில் வாந்தி, வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து, ஹாஸ்பிடலில் பரிசோதித்த அவர், தனக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டதை அறிந்து வேதனை அடைந்தார்.

தற்சமயம் டயலிசிஸ் செய்து வந்தாலும் விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு சிறுமி தள்ளப்பட்டுள்ளார்.  இதற்கு அவர் தான் படிக்கும் பள்ளியின் நீச்சல் குளத்தில் தினசரி குளிக்க நேரிட்டதாகவும், அதில் இருந்து ஈ.கோலி கிருமி வாய் வழியாக வயிற்றில் நுழைந்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

நீச்சல் குளம்தான் இதற்கு முழு காரணம் என்பதால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மாணவ, மாணவியரின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.