இளம் பெண்ணை கடத்தி 1 மாதம் கறபழிப்பு! 6 பேர் மாற்றி மாற்றி அரங்கேற்றிய கொடூரம்!

இளம் பெண்ணை கடத்திச் சென்று ஒரு மாதம் பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.


ராஜஸ்தான் மாநிலம் நாகர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் கடத்தப்பட்டார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் லட்னு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அந்தப் பெண் என்னவானார் என்பது தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. இந்த நிலையில் சனிக்கிழமை அன்று திடீரென ஒரு காவல் நிலையத்துக்கு வந்த அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடூரத்தை போலீசாரிடம் தெரிவித்தார். ஒரு மாதத்துக்கு முன் கடத்தப்பட்ட தன்னை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்ற 6 பேர் கொண்ட கும்பல் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் கூறியுள்ளார்.

ஒரு மாதம் இந்த வேதனையை தான் அனுபவித்ததாகவும் போலீசாரிடம் புகார் கூறியுள்ளார். பெண்ணின் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் அந்த ஆறு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். அதனடிப்படையில் அந்த கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.