லண்டன்: இளம்பெண் ஒருவர் இரண்டு பிறப்புறுப்புகளைக் கொண்டிருந்த நிலையில், அவருக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
மாதவிடாயின் போது இரண்டு இடங்களில் வலி..! கதறிய இளம் பெண்..! மருத்துவ பரிசோதனையில் அம்பலமான திடுக் தகவல்! அதிர்ந்த டாக்டர்கள்!

பிரிட்டனைச் சேர்ந்தவர் மோலி ரோஸ் டெய்லர். 19 வயதாகும், இவர் 8 ஆண்டுகளுக்கு முன்பாக, பூப்பெய்தினார். ஆனால், அன்று முதல் மாத விலக்கு ஏற்படும் நாட்களில் கடுமையான வலி அவரது பிறப்புறுப்பில் ஏற்பட்டுள்ளது. இதனை ஆரம்பத்தில் இயற்கையான வலிதான் என நினைத்த ரோஸ் டெய்லர், ஒருகட்டத்தில் காதலனுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளாமல் கடும் அவதிப்பட்டார்.
இதன்பேரில், மருத்துவரை சந்தித்தார். ஆனால் மருத்துவர்களுக்கும் இதற்கான காரணம் புரியவில்லை. இதையடுத்து, கடந்த 8 ஆண்டுகளாக, மருத்துவர்கள் மோலியின் உடல் உறுப்புகள் பற்றி விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் முடிவாக, அவருக்கு இரண்டு கருப்பை, இரண்டு பிறப்புறுப்பு உள்ளிட்டவை இருப்பதாக, சமீபத்தில் கண்டுபிடித்தனர். எனினும், அவரது பிறப்புறுப்பை இரண்டாகப் பிரிப்பது வெறும் 2 செமீ தடிமன் கொண்ட ஒரு சதைப்பகுதிதான் என்பதை கண்டுபிடிக்க மருத்துவர்கள் திண்டாடினர். அந்த சதைப்பகுதி நாளுக்கு நாள் வளர தொடங்கியதோடு, அடிக்கடி காயம்பட்டு ரத்தம் கசியவும் தொடங்கியிருக்கிறது.
இதையடுத்து, மீண்டும் மருத்துவர்களை நாடிய மோலிக்கு, அப்போதுதான் உண்மை தெரியவந்துள்ளது. இரண்டு பிறப்புறுப்பு ஏற்பட அந்த 2 செமீ தடிமன் உள்ள சதைப்பகுதிதான் காரணம் என, கண்டுபிடித்த டாக்டர்களும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, அதனை அகற்றினர். தற்போது, அவருக்கு ஒரே பிறப்புறுப்புதான் உள்ளது. இதேபோல, இரண்டு கருப்பைகளில் ஒன்றை அகற்றவும் திட்டமிட்டுள்ளதாக, மோலி குறிப்பிடுகிறார்.