தம்பியின் நண்பனுக்கு மோக வலை விரித்த இளம்பெண்! குறுக்கே வந்த கணவன்! பிறகு அரங்கேறிய திக்திகில் சம்பவம்!

ஆவடியை சேர்ந்த இளம் பெண் கள்ள காதலனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு கணவரை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


ஆவடியை சேர்ந்த ராஜேந்திரன் வயது 33 இவர் தனியார் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். மனைவி அஷ்வினி இரு மகள்கள் ஒரு மகன் என அன்பாக வாழ்ந்த குடும்பம் தான் சாதாரண குடும்ப சண்டை காரணமாக அஷ்வினி தனது கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து தனது தாய் வீட்டில் தங்கியுள்ளார்.

சென்னை செம்பியத்தில் இருக்கும் தனது தாய் வீட்டில் இருந்த அஷ்வினிக்கு அதே பகுதியை சேர்ந்த தனது தம்பியின் நண்பர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. நாளுக்கு நாள் அஷ்வினி மற்றும் அவரது காதலன் அனு ரகுவம்சி இரு வருக்குமான பழக்கம் காதலாக மாற தனிமையில் சந்தித்து எல்லை மீறவும் துவங்கியுள்ளனர்.

இதனை அடுத்து கணவரை விடித்து காதலன் ரகு வம்சியுடன் வாழ நினைத்த அஷ்வினிக்கு கணவரை கொலை செய்ய காதலன் திட்டம் போட்டு கொடுத்துள்ளான். அதன்படி, சம்பவத்தன்று காதலன் ரகு வம்சி , என் தம்பி மற்றும் அவரது நண்பர் என மூவரும் எனது கணவர் வழக்கமாக செல்லும் இரயிலில் ஏறி கொண்டனர்.

நான் அதற்க்கு முன் பெட்டியில் ஏறினேன், திட்டம் போட்ட படியே மூவரும் என் கணவரை ரயிலில் இருந்து தள்ளிவிட அவரது கதை முடிந்து விட்டது என கொண்டாடியதாக வாக்குமூலம் அளித்தார் ,மனைவி அஷ்வினி.

மேலும் கணவர் அதிர்ஷ்ட வசமாக பலத்த காயங்களுடன் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து தானாக மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அஷ்வினி உள்ளிட்ட மூவரையும் மடக்கி பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்துள்ளனர்