திடீரென படுவேகத்தில் மூடிய ஜன்னல் கதவு..! குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண்ணின் விரல் துண்டான பயங்கரம்! சிதம்பரம் பரபரப்பு!

இரயிலி அம்மா வீட்டிற்க்கு ஆசையாக கிளம்பிய மகளின் கை விரல் துண்டாக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் வினோத் அவரது மனைவி சரண்யா விடுமுறை தினத்தை ஒட்டி மகளுடன் அம்மா வீட்டிற்க்கு கிளம்பியுள்ளார். மயிலாடுதுறையில் உள்ள அம்மா வீட்டிற்க்கு ஆசையோடு கிளம்பிய சரண்யா மகளுடன் ஜன்னலுக்கு அருகில் அமர்ந்து இருந்துள்ளார்.

யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில் இரயில் ஆலப்பாக்கத்தை நெருங்கிய போது ஜன்னல் கதவு அதிர்வின் காரணமாக வேகமாக கீழே விழுந்து மூடியது. கையை ஜன்னல் ஓரமாக வைத்து இருந்த சரண்யாவின் கை விரல் ஜன்னல் கதவு விழுந்த வேகத்தில் துண்டாகி போனது.

இதனால் வலியில் அலறிதுடித்த சரண்யாவுக்கு அருகில் இருந்த சக பயணிகள் உதவ முன் வந்தும் ,டி டி ஆர் இடம் முதலுதவி பெட்டி கேட்டுள்ளனர். ஆனால் டி டி ஆர் முதலுதவி செய்வதற்கான எந்த பொருட்களையும் கொண்டிருக்கவில்லை மேலும் அவர் சாவகாசமாக சொன்ன பதில் பயணிகளை அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

இதற்கிடையில் , அடுத்த நிறுத்தத்தில் இறங்கி அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கபெற்ற சரண்யா சிகிச்சை பெற்று வருகிறார். ரயிலில் சென்ற சரண்யாவுக்கு இப்படி ஆனது அவரது உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.