ஒரு காலை இழந்து தவிக்கும் இளம் பெண்! மாற்று கால் பொருத்த ஸ்டாலின் செய்த உதவி! நெகிழ்ந்த குடும்பம்!

கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்ததால் தடுமாறிய இளம் பெண் லாரிகளுக்கு இடையே சிக்கி ஒரு காலை இழந்தார். அவருக்கு மாற்று கால் பொருத்த ஸ்டாலின் 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.


இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள ஸ்டாலின், அதிமுக கொடிக் கம்பம் சரிந்ததால் விபத்துக்குள்ளாகி, கால்கள் அகற்றப்பட்டுள்ள #Anuradha-வுக்கு ஆறுதல் கூறினேன். திமுக சார்பில் நிதியுதவி வழங்கி, அவருக்கு செயற்கைக் கால் பொருத்தவும் உதவப்படும் என உறுதியளித்தேன். அதிமுக சார்பில் ஆறுதல் கூட இல்லை; இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடாது! என்று கூறியுள்ளார்.