எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ய வந்த பெண்ணை ஆபாசம் படம் பிடித்த மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
ஸ்கேன் எடுக்க வந்த பெண் உடை மாற்றும் வீடியோ! மருத்துவமனை ஊழியரின் வில்லங்க செயல் !!

புனேவில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு, லாகேஷ் லாஹூ உட்டேகார் (25 வயது) என்பவர் வார்டு பாயாக பணிபுரிந்து வருகிறார். அதே மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக, சமீபத்தில் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை செய்யும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்காக, அவர் மருத்துவமனையில் உள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் மையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த லாகேஷ், அந்த பெண்ணை, அருகில் உள்ள மற்றொரு அறைக்குச் சென்று, ஆடை மாற்றி, மருத்துவமனை சார்பாக தரப்படும் ஆடையை அணிந்து வரும்படி பணித்துள்ளார்.
இதையேற்று, அந்த பெண் அங்கே சென்று ஆடை மாற்றியுள்ளார். அப்போது, அங்கே ஃபோன் ஒன்று இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இதுபற்றி தனது கணவரிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து, அந்த ஃபோனை 2 பேரும் சோதித்து பார்த்துள்ளனர். அதில், அவர் ஆடை மாற்றும்போது வீடியோ எடுக்கப்பட்டிருந்த காட்சி பதிவாகியது தெரியவந்தது.
இதன்பேரில், அவர்கள் கோரிகான் பார்க் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதை விசாரித்த போலீசார், சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஊழியர் லாகேஷ் லாஹூ மீது இந்திய தண்டனைச் சட்டம் 354 (பெண்ணின் அனுமதியின்றி அவரை அந்தரங்கமாக படம்பிடித்தல்) பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்துள்ளனர்.
எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும்போது, ஆபாச படம்பிடித்த சம்பவம் அந்த மருத்துவமனை நோயாளிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.