திருமணம் செய்து கொள்ளவில்லை என போலீசில் புகார் அளித்த காதலியை நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என மிரட்டிய இளைஞருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
திருமணத்திற்கு முன்பே உடல் உறவு..! எதிர்கால கணவன் நண்பர்களுடனும் உல்லாசம்..! வீடியோ பதிவு..! இளம் பெண்ணின் விபரீத அனுபவம்!
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அங்கூர்குமார் என்பவர் பெங்களூரில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இதேபோல் பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் கம்ப்யூட்டர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்கள் இருவருமே திருமண இணையதளத்தில் திருமணம் செய்து கொள்வதற்காக வரனை தேடி தங்களது விவரங்களை பதிவு செய்திருந்தனர்.
கடந்த நவம்பர் மாதம் அங்கூர்குமார் இணையதளத்தில் பதிவு செய்திருந்த பெண் என்ஜினியரின் விவரங்களை பார்த்து திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதிக்க இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து அங்கூர் குமாரை நம்பி பல இடங்களுக்கு சென்று அந்த பெண் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் காதல் விவகாரம் அங்கூர் குமாரின் பெற்றோருக்கு தெரியவர வேறு சமுதாயத்தை சேர்ந்த பெண் என கூறி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணுடனான பழக்கத்தை கைவிட்டுள்ளார் அங்கூர் குமார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தபெண் பொம்மனஹள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட அங்கூர் குமார் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
தன்மீது புகார் அளித்த காதலியை பழிதீர்க்கும் நோக்கத்தில் அவருக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந் நிலையில் பெண்ணுக்கு போன் செய்த அங்கூர் குமார், ‘வருகிற 22-ந் தேதி எனது நண்பர்களுடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னுடன் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோக்களை இணையதளங்களில் பதிவேற்றிவிடுவேன்’என்று மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அங்கூர் குமாருடன் உல்லாசமாக இருந்தபோது ரகசியமாக படம்பிடிக்கப்பட்டதை அப்போதுதான் தெரிந்து கொண்டார். இதை அடுத்து அங்கூர் குமார் மீது மீண்டும் கோனனகுண்டே போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு அங்கூர் குமாருக்கு போலீசார் ‘சம்மன்’அனுப்பி உள்ளனர்.