ஐதராபாத்: தெருநாயால் இழுத்துச் செல்லப்பட்ட பச்சிளங் குழந்தையை பொதுமக்கள் மீட்டுள்ளனர்.
தெரு நாய் கவ்விச் சென்ற பச்சிளம் பெண் குழந்தை! தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அரங்கேறிய பயங்கரம்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

ஆந்திராவில் உள்ள காக்கிநாடா புறநகர்ப்பகுதியில் சாலையோரம் பச்சிளங் குழந்தை ஒன்று கிடந்துள்ளது. பிறந்து சில மணிநேரங்களே ஆன அந்த குழந்தையை தெருநாய் ஒன்று இழுத்து வந்து அங்கு போட்டதாக, தெரியவந்தது. இதன்பேரில் உடனடியாக, குழந்தையை மீட்ட பொதுமக்கள், அதனை காக்கிநாடா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, அந்த பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிறந்து ஒரு நாளே ஆன அந்த குழந்தையை தெருநாய் இழுத்து வந்ததால், உடல் முழுக்க காயம் ஏற்பட்டிருக்கிறது.
அதற்கான சிகிச்சைகள் தரப்படுகிறது. அதேசமயம், குழந்தையின் எடை குறைவாக உள்ளதால், குழந்தை பிறந்ததும் அதன் தாய் கைவிட்டுவிட்டாரா என்ற சந்தேகமும் உள்ளது. இதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.