தலையில்லாமல் நிர்வாண நிலையில் 20 வயது பெண் உடல்!

தலையில்லாமல் நிர்வாண நிலையில் கண்டுபிடிக்கபட்ட இளம் பெண்ணின் உடல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


மும்பையின் வசாயை அடுத்த ம் மால்ஜிபாடா என்ற கிராமத்தில் ஒரு நீர் நிலை தலையில்லாத பெண் உடல் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்குசென்றனர். அப்போது தலையில்லாமல் நிர்வாண நிலையில் சிமெண்ட் மூட்டையுடன் கட்டப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் உடல் கிடந்தது. அந்தப் பெண்ணுக்கு 20 வயது இருக்கக் கூடும் என்று போலிசார் தெரிவித்தனர். 

அந்தப் பெண்ணின் வலது மணிக்கட்டில் ஒரு சிவப்புக் கயிறு கட்டப்பட்டுள்ளதாகவும், அந்த உடல் அழுகும் நிலைக்கு செல்லவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். எனவே கொலை அண்மையிலேயே நடந்திருக்கக் கூடும் என்றும் அவர்கள் கூறினர். 

அந்தப் பெண்ணின் தலையை தொடர்ந்து தேடி வரும் பொலீசார் அந்தப் பெண் குறித்து வேற ஏதேனும் தகவல்கள் கிடைக்குமா என  தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இதனிடையே நவ்கார் நகரில் மயானம் ஒன்றின் அருகில் நிர்வாண நிலையில் ஒரு ஆணின் உடல் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அங்கு போலீசார் சென்ற போது அந்த நபரின் முகம் ஆசிட்டால் சிதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த உடலின் மார்புப் பகுதியில் துளையும், கழுத்தில் வேட்டுகளும் இருந்தன. உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீசார் இறந்த நபரை அடையாளம் காண விசாரணை மேற்கொண்டுள்ளனர்.