,இளம் பெண்ணை நடு ரோட்டில் இழுத்துப் போட்டு தகாத செயல், அடி உதை! வைரல் வீடியோ!

மாதம் முழுவதும் தான் வேலைபார்த்த சம்பள பணத்தை கேட்ட பெண் மீது நடுரோட்டில் கொலைவெறி தாக்குதல் நடத்தபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


உத்திரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அப்பகுதி சலூனில் வேலை பார்த்து வந்தார். மாதம் தொடங்கி இன்னமும் சம்பள பணம் வராததால் தான் வேலை செய்யும் சலூனிற்கு சென்று உரிமையாளரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றியது.

இந்த நிலையில் சலூனின் உரிமையாளர் தகாத வார்த்தைகளால் அந்த பெண்ணை திட்டியதோடு  மிக கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் நிலை குலைந்த அந்த பெண் கீழே சரிந்தம்  விடாமல் கடைக்காரருடன் சேர்ந்து அங்கு வேலை பார்க்கும் மேலும் இரண்டு பேர் அந்த பெண்ணை கடுமையாக தாக்கினர்.

மேலும் அந்த பெண்ணை பாலியல் ரீதியாகவும் அவர்கள் சீண்டியுள்ளனர். அந்த பெண் வலியால் துடித்த நிலையில் அப்பகுதியில் சென்ற சிலர் தாக்குதலில்  இருந்து அந்த பெண்ணை மீட்டனர். பொது இடத்தில் பெண் ஒருவர் சரமாரியாக தாக்கப்படும் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது மிக வைராலாக பரவி வருகிறது.