கொலை செய்து விளையாட்டு! விஷ ஊசி போட்டு 55 பேர் கதையை முடித்த கொடூரம்! பதற வைக்கும் காரணம்!

55 பேருக்கு ஊசி போட்டுக் கொன்றதாக, ஜெர்மன் செவிலியர் ஒப்புக் கொண்டுள்ளார்.


ஜெர்மனியை சேர்ந்த நீல்ஸ் ஹோகெல் என்ற நபர் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 2000ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையிலும், சுமார் 100 நோயாளிகளுக்கு தவறான முறையில் ஊசி போட்டுக் கொன்றதாக புகார் கூறப்படுகிறது. அதாவது, நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படுத்தக்கூடிய அஜ்மலின் என்ற மருந்தை ஊசி மூலமாக இவர் செலுத்தி வந்திருக்கிறார்.

இதனை, சக மருத்துவ பணியாளர்கள் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். இதன்பிறகே, இவர் இப்படி ஒரு விஷமத்தனமான வேலையை செய்து வந்த விசயம் அவர்களுக்கு தெரியவந்துள்ளது. ஜெர்மனியின் வடக்கே உள்ள அந்த மருத்துவமனையில், குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சுமார் 100 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 

இதன்பேரில், நீல்ஸ் ஹோகெல் மீது மொத்தம் 100 கொலை முயற்சி வழக்குகள் பதியப்பட்டன. இதில், 31 வழக்குகளில் அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டுள்ளார். அதேசமயம், எஞ்சிய 55 கொலை வழக்குகளும், 14 கொலை  முயற்சி வழக்குகளும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அதில், ஜூன் 5ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, தான் 55 பேருக்கு இவ்வாறு ஊசி போட்டுக் கொன்றதாக, நீல்ஸ் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனால், இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ தொழில் மிகவும் போரடித்ததால், திரில்லிங் ஆக ஏதேனும் செய்யும் நோக்கில் இப்படி செய்ய நேரிட்டதாகவும், நீல்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, எஞ்சிய 14 வழக்குகளில் அவர் மீதான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரையிலும், ஜெர்மன் சட்டத்திற்கு உள்பட்டு, நீல்ஸ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயுள் தண்டனையும் அனுபவித்து வருகிறார். ஆனால், அவர் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு சிறையில் இருக்க முடியாது. விரைவிலேயே ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாக, தகவல்கள் குறிப்பிடுகின்றன.