மோடி வேட்பு மனுவை தள்ளுபடி செய்யுங்கள்! பாய்ன்ட் பிடித்த கெஜ்ரிவால்! அதிர்ச்சியில் பாஜக!

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இரண்டு அல்லது மூன்று காரில் வர வேண்டும், ஒருசிலர் மட்டுமே அலுவலர் முன்பு இருக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் எத்தனையோ கட்டுப்பாடுகளைப் போட்டுள்ளது. ஆனால், அது எல்லாமே மற்றவர்களுக்கு மட்டும்தான், மோடிக்கு இல்லையா என்று நெற்றிக் கண் திறக்கிறது ஆம் ஆத்மி கட்சி.


ஏனென்றால், வாரணாசியில் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல் செய்வதற்குச் சென்றபோது நடைபெற்ற மெகா பேரணியை குற்றம் சுமத்தியுள்ளது. ஏனென்றால் பல கிலோ மீட்டர் நீளம் நடைபெற்ற இந்த பேரணிக்கு 1 கோடியே 27 லட்சம் ரூபாய் மோடி செலவழித்து இருப்பதாக ஆம் ஆத்மியின் எம்.பி. குற்றம் சாட்டுகிறார்.

மிகவும் குறைவான தொகையில் மட்டுமே கையில் பணம் வைத்திருப்பதாக தேர்தல் கணக்கு காட்டியிருக்கும் மோடி, லட்சக்கணக்கான செலவில் கோட் போடுவது எப்படி, மேக்கப் மேனுக்கு லட்சத்தில் சம்பளம் கொடுப்பது எப்படி என்றும் இப்போது சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

என்னங்கப்பா, ஒரு பிரதமருன்னா கெத்து வேணாமா என்கிறது பா.ஜ.க. வழக்கம்போல் ஆம் ஆத்மியின் புகாரை கிழித்து குப்பைக் கூடையில் தேர்தல் ஆணையம் போட்டுவிடும் என்பது எல்லோருக்கும் தெரிந்த சமாச்சாரம்தானே.