ஏன் விபச்சாரம் செய்தால் கேவலமா? திருமாவிடம் பிக்பாஸ் காயத்ரி கேட்ட பகீர் கேள்வி!

ஈழத்தமிழர்களுக்காக இலண்டன் மாநகரில் மாவீரர் நாள் கொண்டாடி ஆவேசமாக பேசியிருக்கிறார் திருமாவளவன்.


அவரை மீண்டும் ஒரு வம்புக்கு இழுத்து கேள்விகள் கேட்டிருக்கிறார் காயத்திரி ரகுராம். நான் வணங்கும் தெய்வத்தைப் பற்றி பேசியது எனக்கு கோபத்தைக் கொடுத்தது. அதனால் பேசினேன். அதற்கு மிகவும் கேவலமாக எதிர்வினை வந்தது. எத்தனையோ பேர் எதிர்த்துப் பேசினாலும், என்னை மட்டும் கேவலமாக விடுதலை சிறுத்தைகள் திட்டினார்கள்.

ஆனால், நாடாளுமன்றத்தின் வாசலில் வைத்து நடிகை என்றும் அவுத்துப் போட்டு நடிப்பவளுக்கு என்ன தெரியும் என்று கேட்டிருந்தார் திருமாவளவன். அதை எடுத்துக்கொண்டு திருமாவை மீண்டும் சீண்டியிருக்கிறார் காயத்திரி.

சினிமா உலகில் நான் மட்டுமல்ல, உங்கள் கம்யூனிட்டியைச் சேர்ந்த பெண்களும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். நீங்கள் என்னை திட்டுவதாக நினைத்து உங்கள் இன பெண்களையும் கேவலப்படுத்தி இருக்கிறீர்கள்.

விபச்சாரம் செய்துதான் பிழைக்கிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள். விபச்சாரத்தில் இருக்கும் பெண்களும் மனிதர்கள்தான். அவர்கள் குடும்பத்துக்காக கஷ்டப்பட்டு தங்களை விற்கிறாங்க. நீங்க அவர்களை கொச்சைப்படுத்தி அவமானப்படுத்துகிறீர்கள்.

விபச்சாரம் தப்பு என்றால், அந்த மாதிரி பெண்களுக்கு ஏதேனும் வேலை கொடுத்தீர்களா? ஏதோ நீங்கள் வேலை கொடுத்து அவர்கள் செய்யாதது மாதிரி அவர்கள் மீது தப்பு சொல்கிறீர்கள். விபச்சாரி என்று பெண்ணை கேவலமாகப் பேசிவிடுகிறீர்கள். அப்படியென்றால், அங்கே போகும் ஆண்களை என்ன சொல்வீர்கள்?

நல்ல ஆண் என்றால் பெண்களை மதிக்க வேண்டும். எந்தப் பெண்ணையும், வேலைக்குப் போகும் பெண்ணையும் தப்பாகப் பேசக்கூடாது. இனிமேல் ஜாதி வெறி, மதவெறி தூண்டக்கூடாது என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

அப்பாடி, சிறுத்தைகளுக்கு வேலை வந்தாச்சு.