நடிகை குஷ்பு அந்த மாதிரியான பெண்! நடிகை காயத்ரி ரகுராம் பகீர் தகவல்!

ஜார்கண்ட் மாநில இஸ்லாமிய இளைஞரை சிலர் ஜெய் ஸ்ரீராம் என சொல்ல வலியுறுத்தி கட்டி வைத்து அடித்தே கொலை செய்த விவாகராம் சூடுபிடிக்க டிவிட்டரில் கட்டி உருளும் இரு நடிகைகள்...


காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஜார்கண்டில் இஸ்லாமிய இளைஞர் தபரேஸ் (வயது 22 ) திருடியதாக கூறி  சிலர் அவரை கட்டி வைத்து ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்ல வற்புறுத்தி அடித்தே கொலை செய்த சம்பவம் குறித்து பகிர்ந்து ,இது தான் புதிய இந்தியாவா, என கேள்வி எழுப்பி கருத்து பதிவு செய்திருந்தார்.

இதற்கு வன்மையாக எதிர்வினையாற்றிய பாஜக ஆதரவாளர் காய்த்ரி ரகுராம், இந்துக்களை கொலைகாரர்களாக சித்தரிப்பது தற்போது டிரெண்டாகி வருவதாகவும், மேலும் குஷ்பூ இது போன்ற பிற மதத்தினர் செயல்களுக்கு ஏன் வாய்திறப்பது இல்லை என எதிர் கேள்வி கேட்டவர்,தொடர்ந்து குஷ்பூ எனது டிவிட் பதிவுகளுக்கு ஒரு நாள் தாமதமாகவே பதில் அளிப்பதில் இருந்து தெரியவில்லையா என்று கேட்டிருந்தார்.

மேலும் குஷ்பு காங்கிரஸில் செயல்படும் விதம், மந்த புத்தியுள்ள குஷ்பூ போன்ற இழிவான பெண்ணுக்கு (அந்த மாதிரியான பெண்) நான் விளக்கம் அளிக்கும் வகையில் அவர் வொர்த் இல்லை என சாடியவர்.

இந்துக்களை சகித்துக் கொள்ளாதவர்களுக்கும், பொய் கூறி வெறுப்பு கொள்பவர்களுக்கும் நான் காவியை சேர்ந்தவள் தான் எனவும், தொடர்ந்து தான் பிறப்புரிமைக்காகத் துணை நிற்பேன் எனவும் காய்த்ரி ரகுராம் காட்டமாக டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். ஏற்கனவே டிவிட்டரில் குஷ்பூ, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையுடன் அடிக்கடி கருத்து மோதுதலில் ஈடுப்படுவது போல தற்போது காய்த்ரியுடனும் பஞ்சாயத்தை இழுத்துள்ளார்