ஒரே நாளில் சிலிண்டர் விலை ரூ.100 குறைந்தது! ஆனால்... எல்லோருக்கும் இல்லையாம்!

கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு, சிலிண்டர் விலை ஒன்றுக்கு ரூபாய் 100 குறைந்துள்ளது


கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக ரூபாய் 100 குறைப்பு  மானியம் மற்றும் மானியம் அல்லாத சிலிண்டர் விலை இம்மாதம் குறைந்துள்ளது.அதன்படி மானியம் அல்லா சிலிண்டர் விலை ஒன்றுக்கு ரூபாய் 100 குறைந்துள்ளது.

மற்றும் கடந்த மாதம் ரூபாய் 737க்கு விற்பனை செய்யப்பட்ட மானியமில்லா சிலிண்டர் தற்போது ரூபாய் 637 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மானியத்துடன் வழங்கப்படும் வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் கடந்த மாதம் ரூபாய் 497க்கு விற்பனை செய்யப்பட்டது.

தற்போது இந்த மாதம் 3 ரூபாய் குறைந்து 494 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மாற்றமானது இன்று முதல் அமலுக்கு வருகிறது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதையடுத்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இம்முடிவை எடுத்துள்ளன.

இந்த விலை மாற்றமானது பொதுமக்கள் மத்தியில் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.