என்ன ஆனது ஹிருத்திக் ரோஷனின் சகோதரி சுனய்னாவுக்கு? - ஏன் அவரை தாக்குகின்றனர் ஹிருத்திக் குடும்பத்தினர் - கங்கணா ரணாவத்தின் சகோதரி அதிரடி டிவிட்.
முஸ்லீம் இளைஞருடன் காதல்! பிரபல நடிகரின் சகோதரிக்கு நேர்ந்த பரிதாபம்!
ஹிருத்திக் ரோஷனின் சகோதரி சுனய்னாவின் காதல் விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிருத்திக் குடும்பத்தினர் அவரை தாக்கி வருவதாக கங்கணா ரணாவத்தின் சகோதரி ரங்கோலி சாண்டல் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சுனய்னா முஸ்லீம் நபர் ஒருவரை காதலிப்பதாகவும் அது பிடிக்காமல் அதில் இருந்து அவரை விலக்குவதற்காக ஹிருத்திக் ரோஷனின் குடும்பத்தினர் அடக்குமுறையை கையாண்டு வருவதாகவும் தெரிவித்துள்ள அவர் விருப்பப்பட்ட எவரையும் காதலிக்க எவருக்கும் உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.
இதற்காக ஹிருத்திக் ரோஷனின் குடும்பதினர் ஒரு பெண் காவலரை அழைத்து வந்து சுனய்னாவை தாக்கியவும் ஹிருத்திக் ரோஷனின் தந்தை ராகேஷ் ரோஷனும் சுனய்னாவை தாக்கியதாகவும் தெரிவித்துள்ள ரங்கோலி, ஹிருத்திக் ரோஷன் தனது சகோதரியை அடைத்து வைக்க முயல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
சுனய்னா தனது சகோதரி கங்கணா ரணாவத்தை அடிக்கடி தொடர்பு கொண்டு அழுததாகவும் தன்னை தனது குடும்பத்தினரின் தாக்குலி இருந்து காப்பாற்றக் கோரியதாகவும் தெரிவித்துள்ள ரங்கோலி அவருக்கு எப்படி உதவுவது என்று தெரியாமல் தவித்த தனது சகோதரி கங்கணா ரணாவத், சுனாய்னாவின் எண்ணை பிளாக் செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
எனினும் சுனய்னா தங்கள் தோழிதான் என்று கூறியுள்ள ரங்கோலி, தானும் தனது சகோதரி கங்கணாவும், சுனய்னாவுக்கு அவரது குடும்பத்தினரால் என்ன நேருமோ என்ற அச்சத்தில் இருப்பதாகவும், இந்தவிவகாரத்தில் பொதுவெளிக்கு கொண்டுவந்தால் சுனய்னாவின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நோக்கத்தில் இதை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
நரகத்தில் வாழ்வது தொடர்கிறது என்றும் தான் களைத்து விட்டதாகவும் அண்மையில் சுனய்னா டிவிட்டரில் பதிவிட்டிருந்த நிலையில் ரங்கோலி இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார். ஹிருத்திக் ரோஷன் தனது முன்னாள் காதலர் என்றும், தங்கள் காதலை வெளியில் சொல்ல வேண்டாம் என ஹிருத்திக் ரோஷன் வலியுறுத்தியதால் தான் விலகிவிட்டதாகவும் ஏற்கனவே கங்கணா ரணாவத் தெரிவித்திருந்தார்.