சினிமாவில் பெண்களை 'கானா' பாடல்கள் பாட வேண்டாம் என சொல்கிறார் கானா உலகின் நாயகன் 'கானா உலகநாதன்'.
பெண்கள் கானா பாடக்கூடாது! வாழ மீனுக்கும் வெலாங்கு மீனுக்கும் புகழ் கானா உலக நாதன் விடும் எச்சரிக்கை!
அதையும் தாண்டி கானா பாடல்கள் மீது அதிக ஆர்வம் கொண்டு பாடி வரும் பெண்களை தான் ஆதரிப்பதாகவும் கானா உலகநாதன் கூறியுள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் ' வாழ மீனுக்கும்' என்ற பாடல் மூலம் மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றவர் கானா உலகநாதன்.
இந்நிலையில் கானா பாடலை யார் வேண்டுமானாலும் பாடலாம் நமது மனதில் உள்ள உணர்வுகளை வார்த்தைகளாக கொண்டுவந்து பாடலாக பாடப்படுவதுதான் கானா சென்னையை தாண்டி விட்டால் கானா மாறிவிடும் கானா சென்னை கானா பாடல் என்கிறார் கானா உலகநாதன். தனது சிறுவயதில் இருந்தே கானா பாடல்களை பாடி வருபவர் கானா உலகநாதன் பல்வேறு மேடை மற்றும் கோவில் விழாக்களில் கானா பாடல்களை பாடி அசத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு 2006ஆம் ஆண்டு சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்தது இந்நிலையில் மேடைகளில் எந்த ஒரு பதட்டமும் இன்றி கானா பாடல்களை பாடி வந்தவர் சினிமா வாய்ப்பு கிடைத்தவுடன் அங்க பாடும்போது பதற்றம் இருந்ததாகவும் கானா உலகநாதன் தெரிவித்துள்ளார். தற்போது அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கம்மியாக இருப்பதே உண்மை.
பெரிய அளவில் எந்த ஒரு வாய்ப்பு கிடைக்காத நிலையிலும் சிறுசிறு விழா மற்றும் சிறிய பட்ஜெட் படங்களில் தற்போது வாய்ப்பு கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது தனது பாடல்களை தரமாக பாடி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார். தற்போது பாடப்படும் கானா பாடல்கள் பெண்களை இழிவுபடுத்துவது மற்றும் தகாத வார்த்தைகளை கூறி திட்டுவது போல அமைகிறது என்னும் வருத்தம் தெரிவித்துள்ளார் கானா உலகநாதன்.
நாங்கள் கானா பாடிய காலத்தில், காதல், பிரிவு, அறிவுரை, சகோதரப் பாசம், பெற்றோர் பாசம், நாட்டுப் பற்று இப்படி எத்தனையோ விஷயங்களை சொல்லிப் பாடிவோம். ஆனால், இப்போதிருக்கும் கானா பாடல்கள் பெரும்பாலும் பெண்களைக் கிண்டல் செய்வதற்காக மட்டுமே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் பெண்களை மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவது, வர்ணிப்பது இப்போது அதிகரித்துவிட்டது.
தற்போதைய கானா பாடல்கள் பாடி வரும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் கானாவை இப்போது இன்னும் பல பேரிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். அந்த வகையில் மகிழ்ச்சி என்றாலும், இளைஞர்கள் கானா பாடல்களில் பெண்களை இழிவு படுத்தாமல் பாடினால் மிகவும் நன்றாக இருக்கும் .பெண்கள் 'கானா' பாடாமல் இருந்தால் நல்லது என்கிறார்.
கானா உலகநாதன். அதையும் பொருட்படுத்தாமல் கானா உலகில் சாதிக்க வேண்டும் என நினைக்கும் பெண்கள் தாராளமாக முன்வந்து கானா பாடல்களை பாடலாம் எனவும் அதற்கு நான் ஆதரிப்பேன் எனவும் கானா உலகநாதன் தெரிவித்துள்ளார் இந்நிலையில் அவருக்கு 'கலைமாமணி' விருதும் வழங்கப்பட உள்ளது.