கேம் ஓவர் திரைப்பட விமர்சனம்! டாப்ஸி படம் எப்படி இருக்கிறது?

நடிகை டாப்ஸி கதையின் நாயகியாக களம் இறங்கி ரசிகர்களை கவர்ந்துள்ளாரா என்று கண்டுபிடிக்கவே இந்த கேம் ஓவர் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.


டிரெய்லரை பார்க்கும் போதே தெரிந்து இருக்கும் கேம் ஓவர் ஒரு சைக்கலாஜிகல் த்ரில்லர் என்று. அதை உறுதிப்படுத்தும் வகையில் தான் படத்தின் துவக்க காட்சியே அமைந்திருக்கும். ஆரம்பமே ஒரு தனியான வீடு, தனியான தெரு.

அங்கு தனியாக வசித்து வருபவர் அமுதா. தொலைவில் இருந்து ஒருவர் அமுதாவை கண்காணித்துக் கொண்டே இருக்கிறார். இதனை உணர்ந்து அமுதா பீதியாகிறார். அப்போது திடீரென வீட்டிற்குள் வரும் மர்ம நபர் அமுதாவின் முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி கொலை செய்கிறார்.

பின்னர் அமுதாவின் தலையை துண்டாக்கி உடலுக்கு தீ வைத்துவிட்டு அந்த நபர் செல்கிறார். இந்த காட்சி மூலமே படம் எந்த அளவிற்கு மிகத் தீவிரமான த்ரில்லர் என்பது தெரியவந்துவிடும். இதன் பிறகு அமுதாவைப் போன்றே வாழ்க்கை வாழும் ஸ்வப்னா.

இருளில் இருந்த போது மனதளவில் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டும் வரும் கேரக்டரில் ஸ்வப்னாவாக நடித்திருக்கிறார் டாப்ஸி. அவர் ஒரு வீடியோ கேம் கிரியேட்டர். அவர் வீடு முழுவதுமே வீடியோ கேம் தொடர்புடைய போஸ்டர்கள், வீடியோ கேம் கேசட்டுகள்.

மேலும் ஒரு காட்சியில் வாழ்க்கை என்பது ஒரு வீடியோ கேம் நடப்பது போல் இருக்கும் ஆனால் நடந்திருக்காது என்று ஒரு போஸ்டர் வரும். அது தான் படத்தின் கதையும் கூட. அமுதாவை கொலை செய்த அதே கொலை காரன் தான் ஸ்வப்னாவையும் விரட்டுவது போல் காட்சி இருக்கும். 

இதனால் அமுதாவை கொலை செய்தது யார் என்பதையும் ஸ்வப்னாவாக நடித்துள்ள டாப்ஸி கண்டுபிடிக்க நேரிடும். ஆனால் அங்கு தான் இயக்குனர் ஒரு ட்விஸ்ட் வைத்திருப்பார். சைக்கலாஜிகல் த்ரில்லர் என்பதால் படத்தை புரிந்து கொள்வதில் சிறிது சிரமம் இருக்கிறது. ஆனால் படம் துவங்கியது முதல் முடியும் வரை வேகமாக செல்கிறது.

அதே சமயம் படத்தில் நமக்கு ஒரு வெறுமை தோன்றுவது உண்மை தான். ஆனால் த்ரில்லர் என்கிற கேட்டகிரியில் படம் தப்பிவிடுகிறது. த்ரில்லர், சைக்கலாஜி போன்றவற்றை விரும்பும் நபர்களுக்கு கேம் ஓவர் நிச்சயம் பிடிக்கும். ஒரு வீடியோ கேமை இன்ஸ்பிரேசனாக எடுத்து கதை எழுதி அசத்தியுள்ளார் இயக்குனர் அஸ்வின் சரவணன்.

படத்தின் நாயகி டாப்ஸி தான் கதைக்கு பலம். மேலும் டாப்ஸிக்கு உதவி செய்யும் வீட்டு வேலைக்காரியாக வரும் கலா அம்மா எனும் வினோதினி வைத்தியநாதன் மிரட்டியிருப்பார். சோ கேம் ஓவர் தாரளமாக தியேட்டரில் சென்று பார்க்க கூடிய படம் தான்.