உலகெங்கும் அதிக மக்களால் பார்க்கப்பட்ட சீரிஸ் என்ற வகையில், கேம் ஆஃப் த்ரோன்ஸ்க்கு அதிக மதிப்பு உண்டு. இந்த ஆண்டு எம்மியில் இந்த சீரிஸ் ஏராளமான விருதுகளை தட்டிப் பறிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கேம் ஆஃப் த்ரோன்ஸ்க்கு எம்மியில் 12 விருதுகள் கிடைச்சது சரி! கஷ்டப்பட்டு நிர்வாணமா நடிச்ச ஆர்யா ஸ்ட்ராக்கிற்கு விருது இல்லையா?
சினிமாவுக்கு ஆஸ்கர் போன்று டி.வி தொடர்களின் ஆஸ்கர் விருது என்றால் இந்த எம்மி அவார்ட்ஸ்தான். இந்த விருதுகளில் கேம் ஆஃப் த்ரோன்ஸ்க்கு ஏராளமான விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சிறந்த டிராமா தொடர் என்ற வகையில் மட்டும்தான் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடருக்கு விருது கிடைத்தது. அதேபோன்று அந்த தொடரில் நடித்திருந்த குட்டை நடிகர் பீட்டருக்கு மட்டுமே சிறந்த துணை நடிகர் விருது கிடைத்தது.
இந்த சீரியல் நாயகன் ஜான் ஸ்நோவாக நடித்த ஹிட் ஹாரிங்டனுக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோன்று நாயகி டார்கேரியனாக நடித்த எமிலியாவுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இதையெல்லாம் விட கதைக்காக நிர்வாணமாக நடித்த ஆர்யா ஸ்ட்ரோக்கிற்கும் எதுவுமே இல்லை. டெக்னிக்கலாக மட்டும் 12 விருதுகள் வாங்கியிருக்கிறது கேம் ஆஃப் த்ரோன்ஸ்.