மீண்டும் வருகிறார் டிராகன் இளவரசி..! கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களுக்கு நல்ல செய்தி

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட, கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் சீரிஸ் சட்டென்று நின்றுபோனது. இதனால் அதிர்ந்துபோன ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அறிவித்து இருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.


ஆம், ‘ஹவுஸ் ஆஃப் டிராகன்’ என்ற பெயரில் மீண்டும் இந்தத் தொடர் ஆரம்பமாக இருக்கிறது. ஆனால், இந்தத் தொடர் முந்தைய தொடரைப் போன்று ஏழு தேசங்களை உள்ளடக்கியதாக இருக்காதாம்.  

டிராகன் இளவரசியான டினெரிஸ் டார்கேரியன் தேசத்தில் மட்டுமே கதை நடப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வேடத்தில் நடித்த எமிலியா க்ளார்க் மட்டுமே முக்கியமாக இடம் பெறுகிறார். கடந்த பாகத்தில் டினெரிஸ் டார்கேரியரின் மூத்த சகோதரரான விஸ்ரேய்ஸ் டார்கேரியனும் நடிக்கிறார். மற்ற தேசத்தவர் எவரும் இந்த பாகத்தில் இடம் பெற மாட்டார்கள்.

முழுக்க முழுக்க டிராகன்களின் ராஜ்ஜியமாக இந்த வெப்சீரிஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரியஸை ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டினுடன் இணைந்து ரியான் கான்டல் தயாரிக்கிறார். 10 எபிசோடு கொண்ட இந்த சீரிஸ் அடுத்த வருடம் வெளிவர இருக்கிறது.