கேம் ஆஃப் த்ரோன் – இறுதி சீசனில் யாரெல்லாம் சாகப்போறாங்க தெரியுமா? டெனேரியஸ் நைட் வாக்கர்ஸ் ராணியாவாளா?

உலகம் முழுவதும் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்த ஒரே டெலி சீரியல் என்றால், அது கேம் ஆஃப் த்ரோன் மட்டும்தான். இதுவரை இந்த சீரியல் 7 சீசனாக ஒளிபரப்பாகியுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு அமெரிக்காவில் வெளியாக இருக்கும் இறுதி சீசனை, நாளை காலை நமது நாட்டில் 6 மணி முதல் பார்க்க முடியும்.


இப்போது வெளியாகியிருக்கும் டிரைலரில், ஆர்யா ஸ்டாக் ஏதோ ஒரு விபரீதத்தைக் கண்டு பயந்து விண்டர்ஃபெல் ஊருக்குள் ஓடுகிறாள். இதன் மூலம் இதுவரை வெளிவராத பயங்கர வில்லன் நைட் வாக்கர்ஸ் ஊருக்குள் நுழைய முற்படுகிறார்கள் என்றே தெரிகிறது.

வெள்ளை முடியழகி டெனேரியஸ் டார்கேரியன் ஏற்கெனவே ஒரு டிராகனை இழந்துவிட்டாள், அந்த டிராகன் இப்போது நைட் வாக்கர்ஸ் வசம் சென்றுவிட்டதால், அதனை டெனேரியஸால் கட்டுப்படுத்த முடியுமா அல்லது அந்த டிராகன், இவளிடம் இருக்கும் மேலும் இரண்டு டிராகன்களையும் கொல்லப்போகிறதா என்பது விறுவிறுப்பாக காட்டப்படுகிறது.

இப்போது டெனேரியஸ் வசம் இருக்கும் இன்னொரு டிராகன் மீது ஏறி யார் போருக்குச் செல்வது என்பதும் சஸ்பென்ஸ். அநேகமாக டிரியன் அல்லது ஜான் ஸ்நோ டிராகனை கட்டுப்படுத்த வாய்ப்பு உண்டு என்பதால், அவர்களும் அரசர் பதவிக்கு போட்டிக்கு வரலாம்.

டெனேரியஸ் உடலிலும் மேட் கிங் ரத்தம்தான் ஓடுகிறது என்பதால், நைட் வாக்கர்ஸ் கையில் சிக்கி, நைட் குயீனாக மாறுவாள் அல்லது அவர்களை வெற்றி அடைந்து மேட் கிங் ஆக மாறுவாள். இதையெல்லாம் தாண்டி வெல்லமுடியாமல் இவளும் அப்பாவைப் போன்று பைத்தியமாகவும் வாய்ப்பு உண்டு.

இந்த இறுதி சீசனில் ஆர்யாஸ் ஸ்டாக், ஏற்கெனவே செத்த பிறகும் உயிர் பெற்று வந்திருக்கும் ஜான் ஸ்நோ, செர்சியைக் காப்பாற்றும் முயற்சியில் ஜேமி ஆகியோர்களுடன் குள்ளன் டிரியன் லேனிஸ்டர் ஆகிய நால்வரும் மரணம் அடைய இருப்பதாகத் தெரியவந்துள்ளது.