மிரட்டும் கஜா 2! நாளை வங்க கடலில் முக்கிய சம்பவம்! வானிலை மையம் எச்சரிக்கை!

அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்ககடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்,


அந்த காற்றழுத்த பகுதியானது அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று மண்டலமாகவும் பின்னர் புயல் சின்னமாக மாற வாய்ப்பு .. இந்த மண்டலமானது தமிழக கடற்கரையை நோக்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இதன் காரணமாக 28ம் தேதி முதல் தென் கடலோர தமிழகத்தில்  கன மழைக்கு வாய்ப்பு.

29ம் தேதி உள் தமிழகம் மற்றும் பல தமிழகத்தின் பகுதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பு . தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல். கடந்த 24 மணி நேரத்தை பொருத்த வரை புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 5செ.மீ மழையும்,கோவை மாவட்டம் வால்பாறையில் 4 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

அதே போல் தஞ்சை மாவட்டம் மதுக்கூர், திருவண்ணாமலை மாவட்ட வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில் 2செ.மீ மழை பதிவாகி உள்ளது .. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்,அதிகபட்ச வெப்பநிலையாக 36டிகிரி செல்சியஸ்,குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் .