தள்ளுவண்டி! ஆட்டோ! பிறகு கார்! சிட்டியை நடுநடுங்க வைத்த முரட்டுக் காளை! பீதியில் மக்கள்! எங்க தெரியுமா?

பீகார் மாநிலத்தில் சாலையின் ஓராத்தில் நின்று கொண்டு இருந்த காரை கண்ட காளை ஒன்று அதனை தூக்கி பந்தாடிய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


பீகார் மாநிலத்தில் உள்ள ஹஜிபூர் மார்க்கெட் பகுதியில் சாலையில் அமைதியாக சென்றுகொண்டிருந்த காளை ஒன்று திடீரென ஆக்ரோஷமாகியது. அதனை கண்ட பொது மக்கள் ஓடி ஓரமாய் ஒளிந்து கொண்டனர். பின்னர் அப்பகுதியில் இருந்த ஆட்டோவை கொம்பால் முட்டி தூக்கியது.  

 இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து சாலையின் ஓரமாக நின்ற தள்ளுவண்டி சக்கிள் போன்ற வாகனங்களை ஒன்றை விடமால் முட்டிக்கொண்டே சாலையின் நடுவே சென்று கொண்டு இருந்தது.

பின்னர் இறுதியில் காளை கார் ஒன்றை முட்டி தூக்குகிறது. என்ன கோவம் என்று தெரியவில்லை அந்த காளை காரை பந்து ஆடியது. இப்படியே போனால் காளையின் கோவம் நீண்டு கொண்டும் செல்லும் என்று எண்ணிய பொதுமக்கள் காளையின் மீது தண்ணீரை ஊற்றி விரட்ட முயற்சிக்கின்றனர்.

அப்பவும் அடங்காத காளையின் கோரதாண்டவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.