ஐஸ்லாந்தில் பனிப்பாறைக்கு இறுதிச் சடங்கு!

ஐஸ்லாந்த் நமது கற்பனைகளில் அடங்காத ஒரு வினோத நாடு.ஐரோப்பாவின் நார்டிக் நாடுகளில் ஒன்று.எங்கும் பனிமயமாக இருக்கும்.தமிழ் நாட்டின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்குள்ள ஐஸ்லாண்டின் மக்கள் தொகை வெறும் 3லட்சது 60 ஆயிரம்தான்.


அந்தக் குட்டி நாடு உலக நாடுகளுக்கு முதல் எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது.அந்த நாட்டில் இருந்த ' ஓக்ஜோகுல் ' என்கிற பழைமையான பனிப்பாறை காலநிலை மாறுதல்களால் முற்றிலும் உருகி மறைந்து போனதல் அந்தப் பனிப்பாறைக்கு இறுதி அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள் அந்த நாட்டு மக்கள்.அதற்கு 'ஒகே' எனச் செல்லப் பெயர்கூட வைத்திருக்கிறார்கள்.

1901ம் வரையப்பட்ட ஒரு மேப்பின் படி  படி அந்த பனிப்பாறை 36 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக இருந்திருக்கிறது.1986ல் எடுக்கப்பட்ட சாட்டிலைட் புகைப்படத்தின் படி அது 15 சதுர கிலோமீட்டருக்கு சுருங்கி விட்டது.கடந்த 2019 ஆகஸ்ட்டில் நாஸாவின் புவியியல் ஆய்வுமையத்தின் படத்தின் படி ஓக்ஜோகுல் உயிரை விட்டுவிட்டது.கடந்த ஞாயிறன்று நூறு பேர் கொண்ட உள்ளூர் வாசிகள்,செய்தியாளர்கள், ஐஸ்லாந்தின் பிரதமர் காத்தரின் ஜேகப்டாட்டீர்,நிலவியல் நிபுணர் சிங்கோர்சோன் ஆகியோர் அந்தப் பனிப்பாறையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.

இது வரை புவி வெப்பமடைதல் என்பது வெறும் விவாதப் பொருளாக மாறிவிட்டது.இன்னும் 200 ஆண்டுகளில் ஐஸ்லாந்தில் உள்ள எல்லா கிளேசியர்களும் மறைந்து விடும் என்று சொன்ன சிங்கோர்சோனா உட்பட்ட அனைவரு 2 கிமீ உயர எரிமலைப் பாறையில் ஒரு நினைவுச் சின்னத்தை பதித்தனர்.

' ஒகே ( ஒக்ஜோகுல்) தான் கிளேசியர் அந்தஸ்த்தை இழந்த முதல் பனிப்பாறை' என்கிற வாசகம் அதில் பொறிக்கபட்டு இருந்தது. கால நிலை மாற்றம் , வெளியேறும் கார்பன் அளவை கட்டுப்படுத்துவதால் மட்டுமே கட்டுப்படுதப்படும் வாய்ப்பு இருக்கிறது.

பூமியில் வெளியேற்றப்படும் கார்பன் வாயுவில் 60 சதவீதம் , சீனா,அமெரிக்கா,இந்தியா,ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளால்தான் வெளியிடப்படுகிறது. நாம் இந்த பூமியின் உரிமையாளர்கள் அல்ல, வாடகைக்குத்தான் குடியிருக்கிறோம்.

இதை காப்பாற்றி அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு நாடும் உணர வேண்டும்.இல்லா விட்டால் சிங்கோர்சன் அச்சப்படுவது போல துருவத்தில் உள்ள பனிப்பாறைகள் எல்லாம் உருகி பாதி பூமி நீருக்குள் முழுகிவிடும்.