அயோத்தி நிலம் முழுமையும் இந்துக்களிடம் சென்றது ஏன், எப்படி, எதற்கு? உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழு பின்னணி!

அயோத்தி நிலம் முழுமையும் இந்துக்களிடம் சென்றது எப்படி? உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழு பின்னணி!


அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் 2.77 ஏக்கரும் முழுமையாக இந்துக்களிடம் சென்றது எப்படி என்பதற்கான விளக்கம் தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் பிறந்த இடம் என்று கூறப்படுகின்ற ராமஜென்மபூமியில் கட்டப்பட்டதாக கூறப்படும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த 2.77 ஏக்கர் நிலம் யாருக்க சொந்தம் என்கிற பிரச்சனை எழுந்தது. பாபர் மசூதி இடிக்கப்ப்டட பிறகு அந்த இடத்தை மத்திய அரசும், உத்தரபிரதேச அரசும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

அங்கு சிறிய கூடாரம் போல் போடப்பட்டு ராமர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதனிடையே அந்த இடத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் தாங்கள் ராமர் கோவில் கட்டப்போவதாக கூறி ராம் லல்லா எனும் அமைப்பும், நிர்மோஹி அகாரா எனும் அமைப்பு வழக்கு தொடர்ந்தன. இதே போல் மீண்டும் பாபர் மசூதியை கட்ட அந்த இடத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று சன்னி வக்ஃபு வாரியம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் கூறிய சில அம்சங்கள் தான் அந்த இடத்தை மொத்தமுமாக ராம்லல்லா எனும் அமைப்பிடம் ஒப்படைக்கும்படி ஆகியுள்ளது. இந்த ராம்லல்லா எனும் அமைப்பானது கடவுள் ராமருக்காக தோற்றுவிக்கப்பட்டு கடவுள் ராமரே இந்த வழக்கை நடத்தியது போன்று சில அம்சங்களை கொண்டது.

அதன்படி உச்சநீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில், பாபர் மசூதி இருந்த இடத்திற்கு கீழே வேறு ஒரு கட்டுமானம் இருந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. அந்த கட்டுமானம் இந்து மத பாரம்பரியத்தில் இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை என்கிற முடிவுக்கு உச்சநீதிமன்றம் வந்துள்ளது.

அதாவது வேறு ஏதோ ஒரு கட்டுமானம் அங்கு இருந்துள்ளது அதனை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்று மறைமுகமாக தீர்ப்பு கூறுகிறது. அதாவது பாபர் மசூதிக்கு கீழே கிடைத்த சில பொருட்கள் இந்து பாரம்பரியத்திலானது என்றும் ஆனால் அது கோவிலா என்று தொல்லியல் துறை உறுதி செய்யவில்லை என்றும் கூறுகிறது. ஆனால் காலி இடத்தில் மசூதி கட்டப்படவில்லை என்கிற முடிவுடன் இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

மேலும் ஒரு இடத்தில் ஒரு கட்டுமானம் இருக்கிறது என்பதற்காகவே அந்த கட்டுமானத்திற்கு அந்த இடம் உரிமையாகிவிடாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதாவது பாபர் மசூதி இருக்கிறது என்பதற்காகவே அந்த இடம் பாபர் மசூதிக்கு சொந்தமாகிவிடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இந்த காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என்கிற தொல்லியல் துறையின் முடிவு தான் இந்த வழக்கில் 2.77 ஏக்கர் நிலத்தை முழுமையாக இந்துக்களுக்கு உரிமையாக்கியுள்ளது.