மீண்டும் உயர்ந்தது பால் விலை..! இந்த முறை எவ்வளவு தெரியுமா? இல்லத்தரசிகளுக்கு ஷாக் தகவல்!

தமிழகத்தில் வரும் திங்கட்கிழமை முதல் பால் விலை உயர்த்தப்படுவதாக தனியார் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.


தட்டுப்பாடு காரணமாக கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் பால் மற்றும் தயிர் விலை உயர்த்தப்படுவதாக ஆரோக்யா, டோட்லா, ஹெரிட்டேஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன. அதன்படி சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) ஒரு லிட்டர் 48 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதுபோல, நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardised Milk) ஒரு லிட்டர் 52 ரூபாயில் இருந்து 56 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

இதுமட்டும் இன்றி கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் (Full Cream Milk) 60 ரூபாயில் இருந்து 62 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. தயிர் லிட்டர் 58 ரூபாயில் இருந்து 62 ரூபாயாக விலை அதிகரிக்கப்படுகிறது அதாவது, பால் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் 6 வரையிலும் தயிர் விலை லிட்டருக்கு ரூ.2-ம் உயர்த்தப்படுகிறது. பால் விலை உயர்த்தப்படுவதால், டீ, காபி உள்ளிட்டவற்றின் விலையும் உயரும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தனியார் பால் விலை உயர்வதால் ஆவின் பாலுக்கு தேவை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

ஏன் எனில் இரண்டிற்குமான வித்தியாசம் லிட்டருக்கு ரூ. 5 முதல் ரூ. 10 வரை உள்ளது. அதாவது ஆவினில் ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்) ஒரு லிட்டர் 47 ரூபாய்க்கும், சமன்படுத்தப்பட்ட பால் (நீலம்) 43 ரூபாய்க்கும், செறியூட்டப்பட்ட பால் (ஆரஞ்ச்) 51 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.