தொடர்ந்து விலகும் நிர்வாகிகள்! கடலில் கரைந்த பெருங்காயமான பாமக!

அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து விட்டு பணம் பதவிகளுக்காக பாமக அமைத்துக்கொண்ட கூட்டணியை மக்கள் மட்டுமல்ல அக்கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களுமே ஏற்றுக்கொள்ளவில்லை.


அதன் காரணமாக பலரும் பாமகவை விட்டு விலகி வருகின்றனர்.அந்த வகையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததை விரும்பாத முக்கிய நிர்வாகிகளான ராஜேஸ்வரி பிரியா ரஞ்சித், பொங்கலூர் மணிகண்டன் பாமகவிலிருந்து விலகிய நிலையில் மேலும் ஒரு மாநிலத் துணைத் தலைவர், இரு மாவட்டச் செயலாளர்கள் பாமகவிலிருந்து விலகினர்

பாமக மாநிலத் துணைத் தலைவர் காங்கயம் கி.மாதவன், மாவட்டச் செயலாளர்கள் இரா.கணேஷ், கொங்கு கிஷோர் ஆகியோரும் பாமகவை விட்டு விலகினர்.

இவர்களில் பாமக மாநிலத் துணைத் தலைவர் காங்கயம்  மாதவன் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் பாமகவில் 1989 முதல் 30 ஆண்டுகளாகப் பணியாற்றி பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே, ராஜேஸ்வரி பிரியா, நடிகர் ரஞ்சித், பொங்கலூர் மணிகண்டன் பாமகவிலிருந்து விலகி விட்டனர்.