மெட்ரோ ரயில், பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்! முதலமைச்சர் அட்டகாச அறிவிப்பு!

டெல்லியில் பெண் பயணிகள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் - முதலமைச்சர் கெஜ்ரிவால்


டெல்லி மாநகர பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். பெண்களுக்கு இலவச சேவை வழங்குவதன் மூலமான செலவை டெல்லி அரசு ஏற்கும். டெல்லியில் பெண்களுக்கு இலவச பொதுப் போக்குவரத்து திட்டத்தை அறிவித்தது கெஜ்ரிவால் அரசு. இலவச பயணத்தை விரும்பாத பெண்கள் டிக்கெட் வாங்கி பயணிக்கலாம். 8.4 லட்சம் பெண்கள் தினமும் அரசுப் பேருந்தை பயன்படுத்துகின்றனர்

தேர்தலை முன்னிட்டு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஆனால் இது பெண்களை முன்னேற்றும் நடவடிக்கை என கூறியுள்ள அவர் 3 மாதங்களில் திட்டம் அமலுக்கு வரும் என்றார்.