பள்ளி மாணவர்களிடம் முதல் இரவு பற்றி பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ.! - திடீர் பதட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது.


இதில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர் இந்நிலையில் அமைச்சர் புகழேந்தி தனது தொகுதி பிரச்சனையை பற்றி மாணவர்கள் கூடியிருக்கும் அவையில் பேசியதால் அதை அவமதித்த அதிமுக எம்பி மரகதம் குமரவேல் "தொகுதி பிரச்சினை எல்லாம் இங்கே பேசாதீர்கள்" என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

காஞ்சிபுரம் மதுராந்தகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாணவ மாணவியருக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 3700 மாணவர்கள் கூடியிருந்தனர். இதில் அமைச்சர் பெஞ்சமின் காஞ்சிபுரம் முன்னாள் எம்பி மரகதம் குமரவேல் அதிமுக மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 

இதையடுத்து திமுக வேட்பாளர் புகழேந்தி மாணவர்களிடையே உரையாடினார். அதில் "நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு வெற்றி பெற்ற சான்றிதழ் இந்த மேடையில் தான் வழங்கப்பட்டது என பெருமையாகப் பேசினார், ஒரு பெண்ணைப் பொறுத்தவரை ஆயிரம் இரவுகளை சந்தித்தாலும் வாழ்வின் கடைசி காலத்தை நெருங்குகின்ற நேரத்தில் அவள் நினைத்து அழைத்துப் போவது முதலிரவு என்று சொல்வார்கள் அதேபோல் நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு முதல் வெற்றியைப் பெற்று தனக்கு பதவி அதிகாரத்தை உறுதி  செய்த சான்றிதழை வாங்கியது இந்த மேடையிலே என்பதை நான் மறக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து தொடர்ந்து அவர் பேசியதில் மதுராந்தகம் ஏரியை தூர்வாரவேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்ததாகவும் சட்டமன்றத்தில் முதலமைச்சரும் தூர்வாரி தரப்படும் ஒப்புதல் அளித்தார் என பேசியுள்ளார்.

 இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக எம்பி மரகதம் குமரவேல் இதையெல்லாம் இங்கே பேசாதீர்கள் பள்ளி விழாவில் தொகுதி பிரச்சினைகளை பேச வேண்டாம் என கூறியுள்ளார். இதனால் விழா மேடையில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது மேடைக்கு எதிர்ப்புறம் இருந்த ஆளும் கட்சியினரும் உங்களின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.

இதையடுத்து கலவரம் நிகழாமல் தடுக்க காவல் துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து கூட்ட நெரிசலை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இதையடுத்து அந்த விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியருக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது.