நியாயவிலைக் கடைகளில் இலவச முகக்கவம் வழங்கும் திட்டம் ..! தலைமை செயலகத்தில் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்!

நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் (பெருநகர சென்னை மாநகராட்சி தவிர) வசிக்கும் குடும்பங்களுக்கு முகக்கவசங்கள் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார்.


தமிழ்நாட்டில் கொரோனாவைரஸ் தொற்றுபரவாமல் தடுக்க தமிழ்நாடுஅரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதன் காரணமாக, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான், நோய்தொற்றிலிருந்து குணமடைந்து, இல்லம் திரும்புவோரின் எண்ணிக்கைஅதிகமாகவும், உயிர் இழப்போரின் எண்ணிக்கைமிகக் குறைவாகவும் உள்ளது. 

மத்திய அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு மேலாண்மைக்கான தேசியவழிகாட்டு நடைமுறைகளில், அனைத்து பொதுஇடங்கள் மற்றும் பணியிடங்களிலும், பிறஇடங்களுக்கு பயணிக்கும் போதும் பொதுமக்கள்அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லாதரமான மறு பயன்பாட்டு முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, தமிழ்நாட்டில்உள்ள 2.08 கோடிகுடும்பஅட்டைதாரர்களின் 6.74 கோடி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு விலையில்லா தரமான மறு பயன்பாட்டு முகக்கவசங்கள் நியாயவிலைக் கடைகளின் மூலம் வழங்கும் வகையில், முதற்கட்டமாக பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிபகுதிகளில் (பெருநகர சென்னை மாநகராட்சி தவிர) வசிக்கும் 69.09 இலட்சம் குடும்பங்களுக்கு 4.44 கோடிவிலையில்லாதரமான மறு பயன்பாட்டுமு கக்கவசங்கள் 30 கோடியே 7லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.