கால்நடைகளுக்கு முதன்முறையாக இலவச ஆம்புலன்ஸ் உதவி..!வந்தாச்சு 1962..

கடலூர் மாவட்டம் மற்றும் 22 மாவட்டங்களில் உடல்நிலை சரியில்லாத கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சம்பவ இடத்திற்கு சென்று சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக இலவச ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கடலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க இலவச ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு மருத்துவமனைகள் மருந்தகங்கள் என்று ஏராளமானவை இயங்கிவருகின்றன. கால்நடைகளுக்கு உடம்பு சரியில்லாத காலத்தில் உரிமையாளர்கள் அவற்றை சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள்.

இலவச ஆம்புலன்ஸ் வசதி மூலம் கால்நடைகளுக்கு இருக்கும் இடத்திற்கே வந்து சிகிச்சை அளிக்கின்றனர். கால்நடைகளுக்கு இலவச ஆம்புலன்சை அழைக்க 1962 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். தமிழக கால்நடைத்துறை இந்த சிறப்பு திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த 3 மாதங்களில் 800 அழைப்புகள் வந்துள்ளன. ஜி.வி.கே., நிறுவனம் இதனை நிர்வகிக்கிறது. ஆம்புலன்ஸில் மருந்துகள், ட்ராலி மற்றும் ஹைட்ராலிக் வசதியுடன் லிப்ட் போன்றவை தயார் நிலையில் உள்ளன. ஆம்புலன்சில் ஒரு மருத்துவர் மற்றும் ஒரு உதவியாளர் பணியில் உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் ஏராளமான அழைப்புகள் வந்துள்ளன. இதனால் ஒரு, ஆம்புலன்ஸ் போதுமானதாக இல்லை எதிர்காலத்தில் கூடுதல் ஆம்புலன்ஸ்கள் எதிர்பார்க்கப்படுகிறது.