அலுவலகத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் சென்ற பெண் ஊழியர்கள்..! காரணம் ஆண் மேனேஜர்! விசாரணையில் அம்பலமான பகீர் சம்பவம்!

சிறுநீரை உடனுக்குடன் அதிகரிக்கும் மருந்து ஒன்றை குளிர்பானத்தில் கலந்து பெண்களுக்கு கொடுத்த அதிர்ச்சி சம்பவம் பிரான்சில் நடைபெற்றுள்ளது. இதை செய்த அதிகாரி ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


பிரான்ஸ் கலாச்சார அமைச்சகத்தில் முக்கிய பொறுப்பில் வகித்து வரும் ஒருவர் நேர்முகத் தேர்வுக்கு வரும் பெண்கள், ஊழியர்கள் என அனைவரையும் முதலில் சந்திக்கும்போது விசேஷ மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுப்பார். அந்த குளிர்பானத்தை குடிக்கும் பெண்களுக்கு சிறுநீர் உற்பத்தி உடனடியாக அதிகரிக்கும்.

கழிவறைக்கு செல்லலாம் என்று யோசிப்பதற்குள் உடனடியாக சிறுநீர் வெளியேறிவிடும். இதை பார்த்து அந்த அதிகாரி ரசிப்பார். பின்னர் போட்டோ எடுப்பார். சிறுநீர் வெளியேறுவதால் அவர்கள் ஆடை முழுவதும் நனைந்து அவமானத்தில் நிற்பதை பார்க்கும்போது அந்த அதிகாரிக்கு தனி சந்தோஷம்.

அந்த அதிகாரிகள் குளிர்பானத்தில் மருந்து கலப்பதை ஒரு ஊழியர் 2018ம் ஆண்டு பார்த்துவிட விஷயம் வெளியில் வந்தது. இதையடுத்து அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர் குளிர்பானத்தில் மருந்து கலந்து பாலியல் ரீதியாகவும் தொல்லைகள் கொடுத்தது தெரியவந்துள்து.

மேலும் பலரது அந்தரங்களை புகைப்படும் எடுத்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் தெரிவித்தபோது, இந்த விஷயத்தை தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், இதனால் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார் அந்த நபர்.