உடம்பில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் காரில் இருந்து இறங்கிய இளம்பெண்! தலைநகரில் நிகழ்ந்த பகீர் சம்பவத்தின் பின்னணி!

பெங்களூரில் மருத்துவ சிகிச்சைக்காக வந்த ஆப்பிரிக்க நாட்டு பெண்ணை அவமானப்படுத்தி இந்தியாவுக்கே தலைகுனிவை ஏற்படுத்தித் தந்துள்ளனர் சில கொடூர இளைஞர்கள்.


கிழக்கு ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சிறுநீரகக் கோளாறு பாதிப்புக் காரணமாக சிகிச்சை மேற்கொள்ள விமானம் மூலம் தலைநகர் டெல்லி வழியாக பெங்களூரு வந்தடைந்தார். அவர் வந்திறங்கிய நேரம் நள்ளிரவு. பெங்களூருவில் ஒரு டாக்சியை வழிமறித்து மருத்துவமனைக்கு வழிகேட்டுள்ளார். அந்த டாக்சியில் 3 இளைஞர்கள் இருந்துள்ளனர்.

தாங்கள் அழைத்து செல்வதாக கூறி அந்த பெண்ணை ஏற்றிக் கொண்டு நகரத்தின் ஒதுக்குப்புறமாக சென்றுள்ளனர். அந்த பெண் வைத்திருந்த நகை, பணம், செல்போனை பறித்துக் கொண்டனர். மேலும் அவரது உடையையும் உருவிக்கொண்டு நடுரோட்டில் தவிக்க விட்டு சென்றுள்ளனர். நிர்வாணக் கோலத்தில் அவமானம் அடைந்த பெண் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்தார்.

பின்னர் அங்கிருந்த பண்ணை வீட்டிற்கு சென்று கதவை தட்டி தனக்கு நேர்ந்த கொடூரத்தை சொல்லி உள்ளார். உடனே அவர்கள் அந்த பெண்ணுக்கு உடை கொடுத்து உதவி செய்துள்ளனர். பின்னர் நேராக காவல்நிலையம் சென்ற பெண் அந்த இளைஞர்கள் குறித்து புகார் அளித்தார்  

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த இளைஞர்களை தேடிவருகின்றனர். மேலும் அந்த பெண்ணுக்க பாலியல் ரீதியாக ஏதேனும் தொல்லை கொடுத்தார்களா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். பெரும்பாலான நாடுகளில் இல்லாத உயர்தர மருத்துவ சிகிச்சை வளர்ந்து வரும் இந்திய நாட்டில் கிடைக்கிறது என நம்பி நாள்தோறும் இங்கு வருகின்றனர்.

பக்கத்தில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் வந்தால் கூட பகைமை பாராட்டாமல் நம்மூரில் அவர்களுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றி அனுப்புகின்றனர். இதனால் இந்தியாவின் மருத்து சேவை பல்வேறு நாடுகளில் பிரபலம் ஆகி வருகிறது. ஆனால் இதுபோன்ற கேவலமான இளைஞர்களின் நடவடிக்கையால் இந்தியர்கள் அனைவரும் தலைகுனியும் நிலை ஏற்படுகிறது. சிகிச்சைக்காக பெங்களூரு வந்த வெளிநாட்டு இளம்பெண் நிர்வாணமாக காரில் இருந்து தூக்கிவீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.