விரைவில் டும் டும் சப்தம்! கேப்டனின் மருமகளாக போகும் வெளிநாட்டுப் பெண்!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களில் சண்முகப்பாண்டியன் அடித்த நிலையில் அந்த இரண்டுமே வெற்றி பெறவில்லை.

இதனால் சினிமா குறித்து படிப்பதற்காக சண்முகப்பாண்டியன் நெதர்லாந்து நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு அறிமுகம் ஆன பெண்ணைத்தான் அவர் தற்போது காதலித்து வருவதாக கூறுகிறார்கள். இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு அந்தப் பெண்ணின் பிறந்த நாள் அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதல் என்று குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார் சண்முகப்பாண்டியன்.

தொடர்ந்து அந்த நெதர்லாந்து பெண்மணியை சென்னை அழைத்து வந்து தனது தாய் தந்தையிடமும் சண்முக பாண்டியன் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிலையில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு பெண் பார்க்கும் படலம் ஆரம்பமாகியுள்ளது. அவருக்கு திருமணம் முடிந்த அடுத்த சில நாட்களில் இளையமகன் சண்முக பாண்டியனுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கேப்டன் வீட்டிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை மருமகளாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.