உணவை கண்டிப்பாக வாயை மூடி மென்று தான் சாப்பிடணும்! ஏன்?

அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் சர்க்கரை நோய் மிகவும் குறைவு. ஏனென்றால் இந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு உதட்டை மூடிச் சாப்பிடும் பழக்கம் உள்ளது.


சாப்பிடும் பொழுது உணவில் எச்சில் கலந்து சாப்பிட வேண்டும். எச்சில் கலந்த உணவு மட்டுமே நல்ல பொருளாக இரத்தத்தில் கலக்கிறது. எச்சில் கலக்காத உணவு கெட்டப் பொருளாக இரத்தத்தில் கலக்கிறது. எச்சிலில் நிறை நொதிகள் (என்சைம்) உள்ளன. உணவில் உள்ள மூலக் கூறுகளைப் பிரிப்பதற்கு இவை மிகவும் உதவி செய்கின்றன. எச்சிலால் வாயில் ஜீரணிக்கப்பட்ட ஒரு உணவு மட்டுமே வயிற்றால் ஜீரணிக்க முடியும். எச்சிலால் ஜீரணிக்காத ஒரு உணவு வயிற்றுக்குள் செல்லும் பொழுது அது கெட்ட பொருளாகவும், கழிவுப் பொருளாகவும் மாறுகிறது.

சாப்பிடும் பொழுது உணவை மெல்லும் பொழுது யார் யார் எல்லாம் உதட்டைப் பிரித்து மெல்லுகிறோமோ அவர்களுக்கு எச்சில் கலப்பது கிடையாது. மெல்லும் பொழுது உதட்டை மூடி மெல்ல வேண்டும். அப்பொழுது தான் எச்சில் கலக்கும். உதட்டைப் பிரித்து மெல்லுவதற்கும், உதட்டை மூடி மெல்லுவதற்கும் என்ன வித்தியாசம் என்றால், சாப்பாட்டை ஒரு பந்து போல கற்பனை செய்யுங்கள். எச்சில் ஒரு பந்து, உதட்டைப் பிரித்துச் சாப்பிடும் பொழுது காற்றுப் பந்து வாய்க்குள் சென்று சாப்பாட்டிற்கும் எச்சிலுக்கும் இடையில் தடையாக இருந்து ஜீரணத்தை கெடுக்கிறது. வாயில் நடக்கும் ஜீரணத்திற்கு காற்று எதிரி. எனவே, தயவு செய்து இனிமேல் எப்பொழுது எதைச் சாப்பிட்டாலும், உணவை வாய்க்குள் அனுப்பவதற்கு மட்டும் உதட்டை பிரியுங்கள். உணவு வாயுக்குள் நுழைந்த உடன் உதட்டை பிரிக்காமல் மென்று விழுங்கும் வரை உதட்டை பிரிக்காமல் இருங்கள்.

இந்த முறையில் சாப்பிடும் பொழுது ஒரு சின்ன சிக்கல் ஏற்படும். தாடை ஒரு வாரத்திற்கு நன்றாக வலிக்கும். ஏனென்றால் ஐம்பது வருடங்களாக இல்லாத புதுப் பழக்கம் அல்லவா அப்படித்தான் வலிக்கும். அந்த வலியைத் தாங்கிக் கொண்டு ஒரு வாரம் பொறுமையாக இருந்தால் வாழ்க்கை முழுவதும் நிம்மதியாக இருக்கலாம்.