500 அடி உயரம்! 86 கி.மீ வேகம்! பிரான்சில் இருந்து பிரிட்டனுக்கு பறந்து சென்ற மனிதர்! அதிசயித்த உலகம்!

ஹோவர் போர்டு என்பது மொப்பட் வீல்கள் போல இரண்டு சக்கரங்களை இணைத்து இருப்பார்கள்.


அதன் மேல் பிடித்துக்கொள்ள ஒரு கைப்பிடியும் ,அதை இயக்க மோட்டாரும் இருக்கும். சக்கரங்களுக்கு இடையில் உங்கள் கால்களை வைத்து நின்றுகொண்டு,உங்கள் ஆயுள் கெட்டியாக இருந்தால் சாலையில் பயணம் செய்யலாம்.அதில் ஜெட் இஞ்சினைப் பொருத்தி பறக்கும் முயற்சியில் இறங்கினார் ஒரு ஃபிரஞ்சுக்காரர்.

அவர் பெயர் பிரான்கி சபாதா.படகுப்போட்டி சாகசக்காரரான இவர்  கடந்தமாதம் பாரிசில் நடந்த 'பாஸ்ட்டில் டே' (ஃபிரஞ்சு புரட்சியின்போது, மக்களால் பாஸ்ட்டில் சிறை உடைக்கப்பட்ட தினம்) அன்று தனது கண்டுபிடிப்பான ஹோவர் போர்டுடன் வானத்தில் பறந்து காட்டினார்.அதில் 500 அடி உயரத்தில் மணிக்கு 86 கிலோமீட்டர் வேகத்தில் பறக்க முடியும் என்று தெரிவித்தார்.

அவருக்கு ஃப்ரஞ்ச் அரசு நம்ம ஊர் காசுக்கு 10 கோடி அளவுக்கு நிதி உதவி செய்தது.அதைத்தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட ஹோவர் போர்டுடன் இங்கிலாந்து ஃபிரான்ஸ் இடையே உள்ள இங்லீஷ் கால்வாயை கடக்க முயன்றார்.ஆனால்,அந்த முயற்சியில் ஹோவர் போர்டுக்கு எரிபொருள் நிரப்ப கடலில் நிற்கும் படகில் இறங்கும் முயற்சியில் தவறி கடலில் விழுந்தார்.

அதில் ஜபதாவுக்கு ஒன்றும் ஆகவில்லை.ஆனால் ஹோவர் போர்டு சேதமடைந்து விட்டது.அதைத் தொடர்ந்து ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உழைத்து அதை சரிசெய்து,பிரான்சின் வடபகுதியில் உள்ள சங்காதேயில் இருந்து கிளம்பிப் தனது ஹோவர் போர்டில் பறந்து , இங்கிலாந்தின் டோவர் பகுதியில் வெற்றிகரமாக தரை  இறங்கி சாதித்தார்.

பிரான்கின் ஜபாதாவின் ஹோவர் போர்டின் மீது , ஃபிரஞ்ச் மற்றும் அமெரிக்க ராணவங்கள் இப்போதே கண்வைத்து விட்டன.அடுத்த பத்தாண்டுகளில் நீங்களும் வானத்தில் பறந்து போகலாம்.