விமான பணிப்பெண்கள் அணியும் குட்டை பாவாடை! கால்களில் கேமரா வைத்து வீடியோ எடுக்கும் பயணிகள்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

ஜப்பான் விமானங்களில் பல பயணிகள் மறைவான கேமராக்கள் மூலம் விமான பணிப் பெண்களை ஆபாச கோணங்களில் புகைப்படம் எடுப்பதாக புகார் எழுந்துள்ளது


இது தொடர்பான புகார்களை அடுத்து விமான தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கம் ஒன்று நாடு முழுவதும் இது தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியது 1623 விமான பெண்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன

அப்போது பயணிகள் பலர் சாக்ஸ் உள்ளிட்ட உடைகளில் கேமராக்களை மறைத்து வைத்து ஆபாசமான கோணங்களில் தங்களை படம் எடுப்பதாக பலர் தெரிவித்தனர் 359 அல்லது 22% பேர் தாங்கள் அவ்வாறு படம் எடுப்பதை உறுதியாகவே தெரிவித்தனர்

441 அல்லது 35.9 சதவீதம்பேர் அவ்வாறு இருக்கக் கூடும் என தெரிவித்தனர் அதற்கு காரணம் சக பயணிகள் தங்களுக்கு அதுபற்றி தெரிவித்ததாகவும் அல்லது கமராக்கள் மறைத்து வைக்கப்பட்டவை தங்கள் பட்டும்படாமல் கவனித்து அவர்கள் கூறினர்

எனினும் அது போன்று நடந்து கொள்ளும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர் விமானத்தின் ஒரு கேமரா மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை நடைமுறை சிக்கல்கள் சார்ந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.

அவ்வாறு கண்டுபிடித்தாலும் பயணிகள் மறுப்பதாகவும் விமானத்தில் பணிப் பெண்களால் தாங்கள் அவமரியாதையாக நடத்தப்படுவதாக இணைய தளத்தில் பதிவிட போவதாக மிரட்டுவதாகவும் அவர்கள் கூறினர் தங்களை இத்தகைய தொல்லைகளில் இருந்து மீட்க சட்டம் தங்களுக்கு உதவிக்கு வர வேண்டும் என்பதே அவரது விருப்பமாக உள்ளது