சிறுவனின் மூக்குக்குள் இருந்து வெளியே எடுக்கப்பட்ட ஜிலேபி கெண்டை மீன்! டாக்டர்களை அதிர வைத்த சம்பவம்!

புதுக்கோட்டை அருகில் சிறுவன் கிணற்றில் குளித்து கொண்டு இருந்த போது மூக்கிற்க்குள் மீன் குஞ்சு சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் மண்ணவேளாம்பட்டியை டேர்ந்தவர் செல்வம் இவரது மகள் அருள் குமார், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். விளையாட்டாக கிணற்றில் நண்பர்கள் உடன் குளித்து கொண்டிருந்த சிறுவன் அருள், சிறிது நேரத்தில் அலரி துடிக்க ஆரம்பித்துள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் , மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனே சிறுவனை மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சை அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில், சிறுவன் மூக்கை பரிசோதித்து பார்த்த மருத்துவர் அவரது மூக்கிற்க்குள் எதோ நுழைந்து இருக்கலாம என சுதாரித்து, நீண்ட முயற்சிக்கு பின்னர், சிறுவன் அருள் மூக்கிற்க்குள் சிக்கிக்கொண்ட ஜிலேபி மீன் குஞ்சை உயிருடம் மீட்டு காப்பாற்றி உள்ளார், தற்போது சிறுவனுக்கு மேல் சிகிச்சை கொடுக்கபட்டு வருகிறது.