முதல்ல சீன முஸ்லீம்களுக்குப் போராடுங்க! இம்ரான்கானுக்கு அமெரிக்கா சூடு! இந்தியைவையும் விட்டு வைக்கலீங்க!

காஷ்மீர் பிரச்சனையில் ஆதரவு கேட்டு முட்டி மோதிக்கொண்டு இருக்கிறார் இம்ரான்கான்.


இந்தியாவுடன் போர் மூளும் ,நான் காஷ்மீர் மக்களின் பிரதிநிதியாகம் பேசுகிறேன் என்று போகிற இடத்தில் எல்லாம் பேசி வருகிறார். இந்த நிலையில் தென் மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை அமைச்சர் அலைஸ் வெல்ஸ் நேற்று அளித்த பேட்டி ஒன்றில் இம்ரான்கானுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.

சீன அரசு அந்த நாட்டில் வாழும் இஸ்லாமிய மக்கள் 5 ஆண்டுகளுக்குள் முழுக்க முழுக்க சீன கலாச்சாரத்துக்கு மாற வேண்டும் என புதிய சட்டம் இயற்றியுள்ளது.அந்தச் சட்டத்தின்படி ஆண்கள் இஸ்லாமிய பாணி உடைகள் அணிவது,தாடி வளர்ப்பது,பென்கள் பர்தா அணிவது மற்றும் மதரஸாக்களில் மத கல்வி கற்பது,கற்பிப்பது ஆகியவை தண்டனைக்குரிய குற்றம்.

இந்த அடக்கு முறைக்கு பயந்து சீனமக்கள் குடும்பம் குடும்பமாக அந்த நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். மேற்குச் சீனாவில் இருக்கும் ஜின் ஜியாங் மாநிலத்தில் வாழும் 'உய்குர்' இன முஸ்லீம்கள் இன்னும் 10 ஆண்டுகளில் முழுமையாகச் சீனக் கலாச்சாரத்துக்கு மாற வேண்டும் என்பதற்காக 10 லட்சம் பேரை தடுப்புக் காவல் முகாம்களில் வைத்திருக்கிறது.

காஷ்மீர் முஸ்லீம்கள் மீது காட்டும் அதே அக்கரைய சீன முஸ்லீம்கள் மீது ஏன் காட்ட மறுக்கிறார் இம்ரான் கான்? என்று பேசியுள்ளார்.  ஆகா, பரவாயில்லையே இந்த அமெரிக்க அம்மனி என்று குஷியாக வேண்டாம்.காஷ்மீரில் அரசியல் தலைவர்களும், தொழிலதிபர்களும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு இருப்பது கவலை அளிக்கிறது.

விரைவில் இந்தக் கட்டுப்பாடுகள் விலகும் என்று நம்புகிறோம்.என்று இந்தியாவையும் தாக்கி இருக்கிறார். இந்த விவகாரத்தில் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருக்கிறார்.இந்தியாதான் மறுத்து வருகிறது என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.