கோயிலில் அசிங்க பொம்மைகள் ஏன் தெரியுமா? திருமாவுக்கு முதல்ல ஒரு கல்யாணம் செஞ்சு வையுங்கப்பா!

கோயில்களில் இருக்கும் அசிங்கமான சிலைகளைப் பார்க்கும்போது மனம் கெட்டுவிடுகிறது என்று பலரும் சொல்வது உண்டு.


அதை மையமாக வைத்துதான் திருமாவளவன் அசிங்கமான பொம்மை என்று கமென்ட் கொடுத்தார். கோயில் கோபுரங்களில் பாலியல் சிற்பங்கள் ஏன் பொறிக்கப்படுகிறது என்ற கேள்விக்கு ஓஷோ என்ன பதில் சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்.

நீங்கள் கஜிராஹோ கோவிலுக்கு செல்கிறீர்கள். கோவிலுக்கு வெளியே ஆணும் பெண்ணும் காதலில் ஈடுபடுகின்ற ஏராளமான சிற்பங்கள் இருக்கும். அங்கே நூற்றுக்கணக்கான ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் காதலுடன், ஒருவரோடு ஒருவர் மிகுந்த நெருக்கமாக இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

அந்த சிற்பங்கள் நம்முடன் உரையாடுவதைப் போலவும், உயிர்ப்புடன் இருப்பதைப் போலவும் காட்சியளிக்கும். இந்த மாதிரியான சிற்பங்களை படைத்தவன் காதலில் கரைகண்டவனாகத்தான் இருப்பான். இப்போது விஷயத்துக்கு வருகிறேன், இந்த சிற்பங்கள் எல்லாம் கோவிலுக்கு வெளியேதான் இருக்கிறது. ஆனால் கோவிலுக்குள் உள்ளே சென்று பார்த்தால் அங்கே இந்த மாதிரியான சிற்பங்கள் எதுவும் இருக்காது, ஏன் கடவுளின் சிலைகூட அங்கே இருக்காது.

வெற்றிடமாகத்தான் இருக்கும் .இந்த கோவில் ஒரு திட்டத்துடன் தான் கட்டப்பட்டிருக்கிறது. நீங்கள் எல்லா கோணங்களிலிருந்தும், அனைத்து கட்டங்களிலிருந்தும் செக்ஸில் இருந்து விழிப்புணர்வு அடைந்து செக்ஸ் என்பது உங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டால் நீங்கள் கோவிலுக்குள் நுழையலாம். இல்லையென்றால் வெளியே இருக்க வேண்டியதுதான். ஏனென்றால் உங்களின் ஆர்வத்துக்குரியது வெளியேதான் இருக்கிறது

நீங்கள் கஜிராஹோவுக்கு சென்று அந்த சிற்பங்களை பார்த்தும் உங்களுக்குள் ஏதாவது சலனம் ஏற்பட்டால் கோவில் உங்களுக்கு ஆனது இல்லை. இந்த கோவில் குறிப்பால் ஒன்றை உணர்த்துகிறது. காமத்தைக் கடந்து வந்தால் அதற்கு அப்பால் இருக்கிற வெற்றிடத்தை ,கடவுளை நோக்கி செல்ல முடியும் என்பதுதான் தத்துவம்.

‘‘திருமா இன்னமும் வெளியேதான் இருக்கிறார். அவருக்கு முதல்ல ஒரு கல்யாணம் செஞ்சு வையுங்க. திருமணம் முடிக்காத காரணத்தால் அவருடைய மனம் முழுவதும் குப்பையாக இருக்கிறது’’ என்கிறார்கள் இந்து முன்னணி நபர்கள்.

சிறுத்தைகளுக்கு வேலை வந்தாச்சு.