இந்திய கடற்படையில் இது தான் முதல் முறை..! மகத்தான சாதனை படைத்த பெண் பைலட் ஷிவாங்கி!

கொச்சி: இந்திய கடற்படையின் முதல் பெண் பைலட் என்ற சாதனையை ஷிவாங்கி படைத்துள்ளார்.


பீகார் மாநிலம் முசாஃபர்பூர் பகுதியை சேர்ந்தவர் ஷிவாங்கி. இந்திய கடற்படையில் பணிக்குச சேர்ந்த ஷிவாங்கி, கொச்சி கடற்படை தளத்தில் சமீபத்தில் பணியமர்த்தப்பட்டார். அங்கு சிறப்பான முறையில் பயிற்சிகளை நிறைவு செய்த ஷிவாங்கி, இந்திய கடற்படையின் சார்பாக, டோர்னியர் கண்காணிப்பு விமானத்தை இயக்கக்கூடிய முதல் பெண் பைலட்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

இதுபற்றி அவர் கூறுகையில், ''இது மிகவும் பெருமையாக உள்ளது. எனக்கும், எனது பெற்றோருக்கும் இது முற்றிலும் புதிய அனுபவமாகும். இது எனது நீண்ட கால லட்சியமாக இருந்தாலும், தற்போதுதான் நனவாகியுள்ளது. எனது பயிற்சியை நல்ல முறையில் நிறைவு செய்து பணியாற்ற உள்ளேன்,'' எனக் குறிப்பிட்டுள்ளார். 

கடற்படையில் பெண் பைலட்டாகியுள்ள ஷிவானி அனைவருக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார். மேலும் அடுத்தடுத்து பெண்கள் இந்த பணியில் இணைய அவர் ஊக்கமாக இருப்பார்.