வான் அரக்கன் F16 போர் விமானத்தை வீழ்த்திய முதல் விமானி அபிநந்தன்!

அமெரிக்க தயாரிப்பான அதிநவீன எஃப் 16 ரக போர் விமானத்தை வீழ்த்திய முதல் இந்திய போர் விமானி அபிநந்தன் தான் என்பது தெரியவந்துள்ளது.


கடந்த வாரம் இந்திய எல்லைக்குள் ஊடுறுவிய பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் துரத்தி அடித்தன. பாகிஸ்தான் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய உலகிலேயே அதிநவீன எஃப் 16 ரக போர் விமானங்களை இந்தியாவிற்கு எதிராக அனுப்பியது.

அந்த எஃப் 16 ரக போர் விமானத்தை எதிர்த்தது இந்தியாவின் மிக் 21 பைசன் ரக போர் விமானங்கள் ஆகும். எஃப் 16 விமானத்தை ஒப்பிடுகையில் இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானம் அவ்வளவு நவீனமானது இல்லை.

அப்படி இருந்தும் கூட இந்திய போர் விமானி அபிநந்தன் அமெரிக்காவின் தயாரிப்பான எஃப் 16 ரக போர் விமானத்தை துரத்திச் சென்று வீழ்த்தியுள்ளார். எஃப் 16 ரக போர் விமானத்தை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிது அல்ல. ஏனென்றால் இந்த விமானத்தை வான் அரக்கன் என்பார்கள்.

தற்போது உலகில் உள்ள போர் விமானங்களில் மிகவும் நவீனமான எஃப் 16 ரக விமானங்கள் ஆகும். இது போன்ற ஒரு விமானத்தை 1970களில் இந்தியா வாங்கி மிக் 21 ரக போர் விமானத்தை வைத்து அபிநந்தன் வீழ்த்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் எஃப் 16 விமானத்தை ஓட்டி வந்த பாகிஸ்தான் விமானியும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அபிநந்தன் மூலமாக பாகிஸ்தனுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் எஃப் 16ரக போர் விமானத்தை வீழ்த்திய ஒரே இந்திய போர் விமானி அபிநந்தன் என்று ஏர் சீஃப் மார்சல் கிருஷ்ணசாமியும் கூறியுள்ளார். இதற்கு இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளுடன் நடத்திய போர் ஒத்திகை உதவியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.