பொங்கலுக்கு ரிலீசாக உள்ள படத்தில் முதல் நாள் முதல் காட்சி எந்த படத்திற்கு செல்வீர்கள் என்கிற கேள்விக்கு பெரும்பாலானவர்கள் ரஜினியின் பேட்ட படத்தை தேர்வு செய்துள்ளனர்.
பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பேட்ட தான்! ஆன்லைன் வாக்கெடுப்பில் கெத்து காட்டிய தலைவர்!
ரஜினியின் சந்திரமுகி
படத்திற்கு பிறகு தற்போது தான் அவர் படம் வெளியாகும் போது மற்றொரு படம் போட்டிக்கு
வெளியாகி உள்ளது. படையப்பா படத்தின் போது ரஜினி படத்துடன் போட்டியிட்ட அத்தனை படங்களும்
படு தோல்வி. இதனை தொடர்ந்து ரஜினி நடித்த பாபா எதிர்பார்த்த அளவிற்கு செல்லவில்லை.
இதனால் அடுத்த சந்திரமுகி படத்தின் போது விஜயின் சச்சின், கமலின் மும்பை
எக்ஸ்பிரஸ் என பல படங்கள் போட்டிக்கு வந்தன.
ஆனால் ரஜினியின்
சந்திரமுகி தான் வழக்கம் போல் கெத்து காட்டி வெற்றிபெற்றது. சச்சின், மும்பை
எக்ஸ்பிரஸ் படங்கள் முதலுக்கே மோசமாகிப்போனது. இதன் பிறகு சிவாஜி, எந்திரன்,
கபாலி, காலா வரை ரஜினி படங்கள் தனியாகவே ரிலீஸ் ஆகி வந்தன. ஆனால் பேட்ட படத்திற்கு
போட்டியாக அஜித்தின் விஸ்வாசம் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படம் வெளியாகும்
நாளில் எந்த படத்தை பார்க்க விரும்புகிறீர்கள் என பிரபல ஜூம் இணையதளம் ட்விட்டரில்
வாக்கெடுப்பு நடத்தியது.
பேட்ட மற்றும் விஸ்வாசம்
ஆகிய இரண்டு படங்கள் ரிலீசாக உள்ள நிலையில், முதல் நாளில் உங்களின் சாய்ஸ் எந்த
படம் என்பது தான் கேள்வி. ட்விட்டரில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் துவக்கத்தில்
பேட்ட மற்றும் விஸ்வாசம் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் இறுதியில் வழக்கம்
போல் சூப்பர் ஸ்டார் வாகை சூடினார். அதாவது மொத்தம் பதிவான 100 சதவீத வாக்குகளில்
59 சதவீத வாக்குகளை ரஜினியின் பேட்ட படத்திற்கு கிடைத்தது.
அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு 41 சதவீத வாக்குகள்
மட்டுமே கிடைத்தன. அதாவது சுமார் 59 சதவீதம் பேர் பேட்ட படத்தை முதல் நாளில் பார்க்க
விருப்பம் தெரிவித்தனர். 41 சதவீதம் பேர் தான் விஸ்வாசம் படத்தை முதல் நாளில் பார்க்க
ஆர்வமாக உள்ளனர் என்று அந்த இணையதளம் கூறியுள்ளது. இதனிடைய பிரபல சினிமா விமர்சகரான
ஸ்ரீதர் பிள்ளையும், கூட போட்டியில் தற்போதைக்கு அ ஜித்தின் விஸ்வாசத்தை விட பேட்ட தான் முன்னிலையில் உள்ளது என்று
கூறியுள்ளார்.