முதலில் அமித் ஷா! பிறகு நாயுடு! எடப்பாடிக்கு எதிராக காய் நகர்த்தும் பன்வாரிலால்!

டெல்லியில் முகாமிட்டுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தீவிரமாக காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம் டெல்லி குறைந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அன்றைய தினமே உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து மிகத் தீவிரமாக இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். அமைச்சர்களின் செயல்பாடுகள், நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி காண காரணங்கள் என சிலவற்றை அமித்ஷாவிடம் வெளிப்படையாக கூறியுள்ளார் பன்வாரிலால். அதுமட்டுமல்லாமல் அமைச்சர்கள் மீதான அடுக்கடுக்கான புகார்கள் மற்றும் அதற்கான ஆதாரங்களையும் அமித் ஷாவிற்கு கோப்புகளாக தயார் செய்து புரோகித் கொடுத்ததாக சொல்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து உடலிலேயே தங்கியிருந்தால் ஆளுநர் நேற்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவையும் சந்தித்துப் பேசியுள்ளார். வெங்கையா நாயுடு மாதத்திற்கு இரண்டு முறையாவது தமிழகம் வந்து விடக் கூடியவர். வெங்கையா நாயுடு தமிழகம் வந்தால் ஆளுநர் மாளிகையில் தங்குவது தான் மரபு.

அப்படி இருக்கையில் டெல்லி சென்றுள்ளார் ஆளுநர் இதற்காக வெங்கையா நாயுடுவை தேடிச் சென்று சந்திக்க வேண்டும் என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கு தமிழக அரசியல் நிலவரம் குறித்து உடனடியாக சில தகவல்களை அவரிடம் தெரிவிக்கவே புரோஹித் வெங்கையா நாயுடுவை டெல்லியில் சந்தித்ததாகவும் சொல்கிறார்கள்.

ஏனென்றால் குடியரசுத் துணைத் தலைவர் ஆவதற்கு முன்பு வரை அதற்காக தமிழக அரசியல் நிலவரங்களை கவனித்து வந்தவர் வெங்கையா நாயுடு. அந்த வகையில் தான் அவரை சென்று சந்தித்து ஆளுநர் பேசி வந்துள்ளார்.  இந்த அளவிற்கு எடப்பாடிக்கு எதிராக ஆளுநர் காய் நடத்துவதற்கான காரணம் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் ஒன்று தான் என்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகம் செயல்பாடுகளில் தான் நியமித்த துணைவேந்தர் சுரப்பதற்கு தமிழக அரசிடமிருந்து ஒத்துழைப்பு வழங்கப்படுவதில்லை.

இந்த நிலையில் பொறியியல் கல்லூரிக்கு ஊழியர்களின் கூட்டமைப்பு சுரப்பாவிற்கு எதிராக மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதன் பின்னணியிலும் தமிழக அரசை இருப்பதாக ஆளுநர் சந்தேகிப்பதாகவும் எனவே தான் தற்போதைய நெருக்கடியை பயன்படுத்தி எடப்பாடிக்கு எதிராக டெல்லியில் அவர் தீவிரமாக காய் நகர்த்தி வருவதாகவும் சொல்கிறார்கள்.