நெருப்புச் சண்டை! தீப்பந்தங்களை வீசி எறிந்து தாக்குதல்! கோவில் பண்டிகையில் விநோதம்!

தீப்பந்தங்களை வீசி எறிந்து சண்டையில் விநோத நேர்த்திக்கடன் ஒரு கோவிலில் செலுத்தப்பட்டு வருகிறது.


கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே உள்ளது கட்டீல் நகர். அங்கு நந்தினி நதியின் ஆற்றின் நடுவே அமைத்துள்ளது பிரசித்தி பெற்ற துர்கா பரமேஸ்வரி கோவில். 

அந்தக் கோவிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கோவிலிலில் பாரம்பரியமாக விநோத சடங்கு ஒன்று நடைபெற்று வருகிறது.

அதாவது இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெருப்பால் சண்டையிட்டுக் கொள்வது தான் அந்த விநோத சடங்கு. பல ஆண்டுகளாக நடைபெற்ற இந்த விநோத சடங்கு நேற்று இரவு நடைபெற்றது.

அதன்படி கோவிலுக்கு வந்த பக்தர்கள் நெருப்பெரியும் கட்டைகளை ஏந்தி ஒருவருக்கு ஒருவர் அடித்துக கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் அந்த தீ பந்தங்களை ,ஒருவர் மீது ஒருவர் வீசி எறிகின்றனர்.

இது துர்கா தேவிக்கு தாங்கள் செலுத்தும நேர்த்திக் கடன் என்று பக்தர்கள் விளக்கம் அளித்துள்ளனர். காயங்களால் தங்களுக்கு எதுவும் நேராது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.