வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ரேஷன் கடை ஊழியர் வேலைக்கு ஆறுமாதத்திற்கு முன்பே நேர்காணல் நடந்தது.
அமைச்சர் வீரமணிக்கும் அமைச்சர் செல்லூர் ராஜூக்கும் மோதல்! காரணம் ஒரே ஒரு பெண் அதிகாரி
அந்த நேர்கானலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200க்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு கடந்த வாரம் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.மாவட்டப் பிரிவினை விவகாரத்தில் ஏற்கனவே முட்டல் மோதல்கள் நடந்து வரும் நிலையில் இது வேலூர் மாவட்ட அதிமுகவினருக்கு மேலும் அதிர்ச்சி அளித்திருக்கிறது.
இதற்குக் காரணம் உள்ளூர் அமைச்சர் வீரமணி சொன்ன ஆட்களுக்குத்தான் பதவி என்கிற செய்தி தான்.இந்த விவகாரத்தில் எல்லோரையும் விட அதிகம் அதிர்ச்சி அடைந்தவர் ஒரு பெண் கூட்டுறவு சங்கத் தலைவர்.இவர் வெறும் கூட்டுறவு சங்கத் தலைவர் மட்டுமல்ல , கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு இந்த பெண் அதிகாரி மிகவும் வேண்டப்பட்டவராம்.
அந்த செல்வாக்கில்,ரேஷன் கடைகள் கூட்டுறவுத் துறையின் கீழ்தான் இயங்குகின்றன.அதனால் நான் சொல்லும் நபர்களுக்கு மட்டுமே பதவி வழங்க வேண்டும் என்று அமைச்சர் வீரமணிக்கும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் செக் வைத்திருக்கிறார் அந்தப் பெண்மணி. அவருக்கு கூட்டுறவுத் துறை பொறுப்பு வகிக்கும் செல்லூர் ராஜுவிடம் இருக்கும் செல்வாக்கை அறிந்து கொண்ட அதிகாரிகள்,
அமைச்சர் வீரமணியிடம் பேசி மொத்த பணியிடங்களை,அமைச்சர் வீரமணி சொல்லும் ஆட்களுக்கு பாதி,பெண் கூட்டுறவு சங்கத் தலைவி சொல்லும் ஆட்களுக்கு பாதி என பிரித்துக் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டார்களாம்.இப்போது உள்ளூர் மந்திரிக்கு செல்லூர் மந்திரியிடம் செல்வாக்கு உள்ளவருக்கும் நடந்த மோதல்தான் வேலூர் அதிமுகவில் பரபரப்பு பேச்சாக இருக்கிறது.