ஜெயமோகனை அடிச்சது பெண் பதிவர்கள் தானாம்! இணையத்தைக் கலக்கும் தோசை மாவு!

புளித்த தோசை மாவை கொண்டுபோய் கொடுக்க முயன்று பலத்த அடி வாங்கித் திரும்பியிருக்கிறார் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன்.


இந்த விவகாரம் குறித்து ஒவ்வொரு நபரும் ஒரு வகையில் இணையத்தைக் கலக்கி வருகிறார்கள். ஒருசிலருடைய பதிவுகளைப் பாருங்கள். ஜாலியாக இருக்கும். வியாபாரிகள் பெரும்பாலான நேரங்களில் கஸ்டமர்களிடம் கனிவோடுதான் நடந்துகொள்கிறார்கள். ஆனால், கோபப்பட்டு தாக்குமளவுக்கு போகிறார்கள் என்றால் பிரபலம் செய்த பிராப்ளம் என்ன என்று சம்பந்தப்பட்டவர்களிடமே விசாரித்தேன்.

நாகர்கோயில் நேசமணி நகரிலுள்ள( ஒலக லெவல் நேசமணி அல்ல) மாவுக்கடையில் வழக்கம்போல் தோசைமாவு கேட்டிருக்கிறார் ஜெயமோகன். 'புதியமாவு தயாராகவில்லை. பழையமாவுதான் இருக்கிறது. கொஞ்சம் புளிப்பாக இருக்கும்' என்று சொல்லித்தான் கொடுத்திருக்கிறார் மாவுக்கடை பெண்மணி. வாங்கிச் சென்றவருக்கு வீட்டில் என்ன டோஸ் விழுந்திருக்குமோ... கோபம் கொப்பளிக்க வந்தவர் திருப்பிக்கொடுத்துவிட்டு காசைக் கேட்டிருந்தால் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும்.

வார்த்தைகளையும் பயன்படுத்தியதோடு அத்துமீறியிருக்கிறார். தன் கண்முன்னே தன் மனைவியின் மீது கை வைத்தால் எந்தக் கணவனால்தான் பொறுத்துக்கொள்ள முடியும்? கோபத்தில் தாக்கியிருக்கிறார் கணவர்.  பிரபலமானவராக இருந்தாலும் யாராக இருந்தாலும் பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்டால் இதுபோன்ற எதிர்வினையை எதிர்கொண்டுதானே ஆகவேண்டும்? 

இந்திய அமைதிப்படை செய்த வன்கொடுமைகளை நீங்கள் ஆதரித்தீர்கள் ஜெயமோகன். முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம்பேர் கொல்லப்பட்டபோதும் நீங்கள் இனப்படுகொலையாளிகள் பக்கமே நின்றீர்கள்.  தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராடத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு எதிராகவே நின்றீர்கள்

கௌரி லங்கேஷ், கல்புர்கி போன்றவர்கள் கொல்லப்பட்டபோதும் நீங்கள் கொன்றவர்கள் பக்கமே நின்றீர்கள். உரிமைப்போரை ஒடுக்குபவர்களே எப்போதும் உங்களுக்கு உவப்பானவர்கள். ஆனால் தோசை மாவுக்காக நீங்கள் சண்டையிட்டு தாக்கப்பட்டபோது சமூகம் உங்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து உங்கள் பக்கமே நிற்கிறது

அதிகாரத்தால் கொல்லப்படுகிறவர்களின் உயிர் புளித்த மாவை விடவும் மேலானது. இன்று ஜெயமோகனுக்கு நடந்த சம்பவத்தின் பின்னணியில் பெண் பதிவர்கள் இருப்பதாக ரகசியத் தகவல் உளவுத் துறை மூலம் கசிந்துள்ளது. அந்த ரகசிய பெண்கள் படையை பிடிக்க ஏழு ரகசியப் படை அமைக்கப்பட்டுள்ளதாம்.