பெண்களின் மாதவிடாய் காலத்தில் உடல் உறவில் ஈடுபடலாமா? பிரபல மருத்துவர் கூறுவதை தெரிந்து கொள்ளுங்கள்!

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா கூடாதா என்பது பற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா கூடாதா? என்பதை பார்க்கலாம்.


மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலியால் அவதிப்படுவர். இந்த சமயத்தில் உச்சக்கட்ட இன்பத்தை அடைவதால் வெளியாகும் எண்டோர்பின்கள், வயிற்று வலி மற்றும் இந்த காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து உடனடி நிவாரணம் தரும். 

பொதுவாக மாதவிடாய் சுழற்சியில் வெளிவரும் இரத்தம் அசுத்தமானதும் இல்லை, நோய்க்கிருமிகளைக் கொண்டதும் இல்லை. அச்சமயத்தில் வெளிவரும் இரத்தத்தில் உடலில் அதிகம் பயன்படுத்தப்படாமல் இருந்த ஆரோக்கியமான இரத்தம் மற்றும் திசுக்கள் தான் இருக்கும். பயன்படுத்தப்படாமல் இருக்கும் ரத்தம் மாதவிடாய் சுழற்சியின் போது வெளியேற்றப்படுகிறது.

மாதவிடாய் காலங்களில் உடலுறவில் ஈடுபட்டால், சற்று அதிகமான அளவில் இரத்தம் வெளியேறும். உடலுறவில் ஈடுபட்ட பின் அதிகமாக வெளிவரும். உச்சக்கட்ட இன்பத்தை அடையும் போது கருப்பையக மாசுக்கள் வேகமாக வெளியேத் தள்ளப்பட்டு, இரத்தக்கசிவு ஏற்படும் நாட்கள் குறையும்.

பெண்களுக்கு பாலுணர்ச்சி அதிகம் தூண்டப்படுவதோடு, உடலுறவில் ஈடுபடவும் தோன்றும். மேலும் மாதவிடாய் காலத்தில் மற்ற நேரங்களில் ஈடுபடும் போது அடையும் இன்பத்தை விட அதிகளவு இன்பத்தை அடைவதாக பெண்கள் கூறுகின்றனர். 

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது பாலியல் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே இக்காலத்தில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட வேண்டும். 

மாதவிடாய் சுழற்சியின் 3-4 ஆம் நாட்களில் தான் உடலுறவில் ஈடுபட்டாலும், கருத்தரிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் ஒருமுறை விந்தணு பெண்களின் உடலினுள் சென்றால் அது 7 நாட்கள் வரை உயிருடன் இருக்கும்.