கள்ளக் காதலனுடன் உல்லாசத்துக்காக 800 சவரன் கெள்ளை! முத்தூட் மினி பெண் ஊழியரின் விபரீதம்!

கோவையில் முத்தூட் மினி நிதி நிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், அந்நிறுவன பெண் ஊழியர் கள்ளக் காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை  ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் முத்தூட் மினி நிதி நிறுவனத்தில் கடந்த சனிக்கிழமை அன்று 812 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் திருட்டு போனது.  முகமூடி அணிந்த மர்மநபர் ஒருவன், ரேணுகா, திவ்யா ஆகிய இரு பெண் ஊழியர்களைத் தாக்கி கொள்ளைடியத்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக கொள்ளை நடைபெற்றபோது பணியில் இருந்த ரேணுகா மற்றும் திவ்யா ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர். ரேணுகாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததார். போலீசார் தங்கள் பாணியை காட்டியதும் ரேணுகா உண்மையை ஒப்புக் கொண்டார்.

முகமூடி அணிந்து வந்து கொள்ளையடித்த நபர் தனது கள்ளக் காதலன் சுரேஷ் என்று ரேணுகா ஒப்புக் கொண்டார்.  இதை அடுத்து அவனைக் கைது செய்த போலீசார், அவனிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை மீட்டனர். ரேணுகாவையும் கைது செய்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.  இருவரிடையே தகாத உறவு இருப்பதாகவும், சொகுசாக வாழ எண்ணி நகைகளை கொள்ளையடிக்க திட்ட தீட்டியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.